1972 ஆம் ஆண்டு திமுகவில் ஏற்பட்ட பிளவு தான் அதிமுக என்பது எல்லோரும் அறிந்தது. அதற்கு பல காரணங்கள், கதைகள் சொல்லப்பட்டு இருந்தாலும் திமுகவிலிருந்து கொண்டே எம்ஜிஆர் முதல்வராகி விடப் போகிறார் என்றும், அவரின் செல்வாக்கு உயர்ந்து வருவதை கண்டும் கலைஞர் எடுத்த அரசியல் சாதுரிய முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது. அண்ணா இறந்த பிறகு நெடுஞ்செழியனை இடைக்கால முதலமைச்சராக ஆக்கியதும் நெடுஞ்செழியன் அதனை தொடர்ந்து முதல்வராக நீடிக்க இருப்பதாக விரும்பியதும், முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் என கூறிக் கொண்டே எம்ஜிஆர் முன்னிறுத்தி கலைஞர் அந்த பதவியை பெற்றதும், இப்போது இருக்கிற கட்சிக்காரர்களுக்கு பெரிதாக தெரியாது. அப்படி இருக்க ஏன் எம்ஜிஆர் பிரிய வேண்டும் அதற்குள்ளும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. கலைஞரை முதல்வராக்க வேண்டும் என யாரும் விரும்பவில்லை கலைஞரே விரும்பினார் அதை எம்ஜிஆர் மூலமாக செயல்படுத்தினார் அப்போதுதான் தெரிந்தது கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கூட சினிமா ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று கலைஞருக்கு. அப்படியே தொடர்ந்தால் கலைஞரை மிஞ்சிவிடும் சினிமா அல்லது சினிமா கதாநாயகன் எம்ஜிஆர் எனவே இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நினைத்துதான் எம்ஜிஆர் பிரிவு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன கலைஞரால்.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து போய்விட்டால் திமுகவிற்கு ஒரு சினிமா பிரபலம் தேவைப்படும் என்பதால் தனது மகன் மு.க.முத்துவையே திரை வாரிசாக உருவாக்கினார் அவரும் வளர்ந்தார். ஆனால் அது தொடரவில்லை முத்துவின் வளர்ச்சிக்கு எம்ஜிஆரையே கொடியசைத்து துவக்க வைத்தவர் கலைஞர். இதுபோன்ற காரணங்களால் சுதாரித்துக் கொண்ட எம்ஜிஆர் தனி கட்சி துவங்கி தான் உயிரோடு இருக்கின்ற வரை முதலமைச்சராகவே இருந்து சாதனை புரிந்தவர். இப்படி திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிளவுபட்டு அதிமுக என்கிற ஒரு இயக்கத்தை துவங்கிய வரலாறு உண்டு. பிறகு எம்ஜிஆர் முதல்வரான பொழுது ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான பிஜூ பட்நாயக் மூலமாக ஒரு மாபெரும் முயற்சி எடுக்கப்பட்டு சென்னை விருந்தினர் மாளிகையில் 13.09.1979 கலைஞரும் எம்ஜிஆரும் சந்தித்து பேசுகிற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது ஜனதா கட்சி.
அங்கு தான் தனது அரசியல் சூழ்ச்சியை தொடங்கினார் அன்னை இந்திரா. கலைஞரும் எம்ஜிஆரும் ஒன்றாகிவிட்டால் ஜனதா கட்சி ஆட்சி வந்துவிடும் இதோடு காங்கிரஸ் தன் கூடாரத்தை காலி செய்து கொண்டு ஓட வேண்டியது தவிர வேறு வழியில்லை என நினைத்து, கருத்து சொல்வதற்கு முன்பாகவே கலைஞரை அழைத்து கூட்டணி உடன்படிக்கையை முடித்தார் அன்னை இந்திரா.
கடுப்பாகி போன எம்ஜிஆர் இனி இணைப்புக்கு சாத்தியமே இல்லை என்று இயங்கத் தொடங்கினார். இப்படி திமுகவிலிருந்து பிரிந்து வந்து எம்ஜிஆர் சந்தித்த நிகழ்வுகள் இப்படி இருக்க. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி பிரச்சினை இல்லாமலும் பிளவு இல்லாமலும் நடத்த முடிந்ததா என்றால் இல்லை. அவருக்கும் சில இடங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டது. எப்படி என்றால்?
அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் இருந்தபோதும் அவருக்கு எதிரான குரல்களும் அக்கட்சியில் இருந்தன. ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்தபோது மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.டி.சோமசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 1984ம் ஆண்டு அதிமுகவில் இருந்து எஸ்.டி.சோமசுந்தரத்தை எம்ஜிஆர் நீக்கினார். அத்துடன் அதிமுகவை விட்டு வெளியேறி ‘நமது கழகம்’ என்ற தனிக்கட்சி தொடங்கினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக உடைந்த வரலாறு
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவ்வப்போது கட்சி யாருக்கு என்று பிரச்னை வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் இருந்தபோதும் அவருக்கு எதிரான குரல்களும் அக்கட்சியில் இருந்தன. இதனால் 1984ம் ஆண்டு அதிமுகவில் இருந்து எஸ்.டி.சோமசுந்தரத்தை எம்ஜிஆர் நீக்கினார். அத்துடன் அதிமுகவை விட்டு வெளியேறி ‘நமது கழகம்’ என்ற தனிக்கட்சி தொடங்கினார்..
ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்தபோது மூத்த தலைவர்களில் ஒருவரான டேய் இதே எஸ்.டி.சோமசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பிற்காலத்தில் அதே ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பிரச்னை வந்தது இல்லை.
எம்ஜிஆர், ஆர்.எம்.வீரப்பன் உட்பட பல மூத்த தலைவர்கள் ஒட்டுமொத்தமாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தபோதுகூட அதிமுகவில் பிரளயம் ஏற்பட்டது இல்லை. 1989ம் ஆண்டு தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டை புறா, ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோற்றதால் ஜெயலலிதா அணியே உண்மையான அணி என தொண்டர்கள் நினைத்தனர். ஜானகியும் அரசியலுக்கு முழுக்கு போட்டார். அதிமுக சின்னம், தலைமை அலுவலகம், கட்சி அனைத்தும் ஜெயலலிதா வசமானது. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் வலதுகரங்களாக இருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். இவர்கள் ஓர் உறோஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது மிகப்பெரும் ரத்தக்களறி ஏற்பட்டது. ஆனால், கட்சி அலுவலகம் செல்வதை போலீஸ் தடுத்து நிலைமையை கட்டுப்படுத்தியது. இந்த சம்பவம் நடந்ததும் 1989ம் ஆண்டுதான். இதையடுத்து நெடுஞ்செழியன், ராசாராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் என்ற நால்வர் அணி உதயமானது. 1995ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் பேசிய ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாசாரம் பற்றியும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் ‘எம்ஜிஆர் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017ம் ஆண்டு சசிகலாவுக்காக ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். ஒரு கட்டத்தில் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் போர்க்கொடி தூக்கி, அமமுக என தனிக்கட்சி தொடங்கினார்.இதன்பின்னர் சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என கூறப்பட்டே வந்தது. இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டி மோதல்கள் பகிரங்கமாக வெடித்தன. அண்மையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த படம் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிமுக பொதுக்குழு ஒரு பக்கம் நடக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை கழகத்தைக் கைப்பற்றியது. இதற்கு இபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இருதரப்பும் இடையே மோதல் வெடித்தது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கத்திக்குத்து சம்பவங்களும் நிகழ்ந்தன. ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸ் அதிரடியாக வெளியேற்றதுடன், கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் தேர்வாகி உள்ளார். அதேநேரம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு? என்கிற விவகாரமும் பூதாகரமாகி உள்ளது.
இதற்கு முன்னர் அதிமுகவில் இப்படி பல பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும் கூட அதிமுக தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவில்லை . ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இளைஞர் என்ற போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்கிற முடிவு தொண்டர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாய் வந்து விழுந்தது ஒரு இயக்கம் தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் அது இயங்க முடியும். அதற்கு தேர்தல் அரசியலை பங்கெடுக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும். அதை விடுத்து தங்களது பிளவுக்கு வேறு ஏதாவது காரணம் சொல்லிவிட போகிறார்களோ என்கிற பயத்தில் இப்படி நடந்து கொள்வது ஆரோக்கியமான அரசியலுக்கு வருவதற்காக இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை ஓபிஎஸ் 90% தான் அதிமுகவில் வைத்திருக்கிறார் இன்னும் பத்து சதவீதம் டிடிவி தினகரன் ஓபிஎஸ் சசிகலாவிடம் இருக்கிறது 90 ரோடு 10 சதவீதம் இணைந்தால் தான் 100% 100 சதவீதம் தான் வெற்றி அடையாளம் எனவே அவர்களை இணைத்துக் கொண்டு இயக்கத்தை வெளிநடத்துவது என்பதுதான் சாரச் சிறந்தது முன்னாள் அமைச்சர்கள் சிலர் தங்களது சுயலாவத்தற்காக தொடர்ந்து இந்த இணைப்புக்காக முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள் எதாவது எடப்பாடி துணிந்து முடிவெடுப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.
Leave a Reply