Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அதனால் அரசியல் பேசுகிறேன். 4 அரசியல் கட்சிகளின் நாற்றமும்,கவுச்சி வாடைகளும்.

கள்ளக்குறிச்சியில் 60 பேர் உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு யார்? காரணம் என்று ஆராயாமல் எத்தனை சதவீதம் மெத்தனால கலந்துள்ளது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அரசு. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் பலியான குடும்பத்திற்கு 5 லட்சம் கொடுக்கிறது நிவாரணமாக அரசு. சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம் தருகிறது அரசு. கடனால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு இதுவரை நிவாரணம் வழங்கவே இல்லை அரசு. கடலில் மீன் பிடிக்கச் சென்று தத்தளித்துக் கொண்டிருக்கிற துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவ குடும்பத்திற்கும் நிதி வழங்கவில்லை அரசு ஆனால்   விஷ சாராயம் குடித்துவிட்டு இறந்து போன குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்று சீமான் கேட்கிற கேள்வியும், பிரேமலதா விஜயகாந்த் முன்வைக்கிற அறிக்கையும் சிந்திக்க வைக்கிறது. ஆமாம் யார்? வீட்டு வரிப்பணம் யாரை? கேட்டு கொடுக்கிறது அரசு தன் மீது விழுந்த பழியை துடைத்துக் கொள்ள  பொது பணத்தை சூறையாடுகிறது. இது எந்த வகையில் நியாயம் என்ன செய்ய வேண்டும் அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும். இதை செய்யாமல் நிவாரணம் வழங்குவதில் எந்த பயனும் இல்லை.

முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971 மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் 1974 ஒரு மறை ரத்து செய்து.
என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கை அமல் படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்த எம்.ஜி.ஆருக்கு, அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள். அவற்றை எதிர்கொள்ளப் பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்தன. இந்தச் சூழலில் மதுவிலக்கை ரத்து செய்த எம்.ஜி.ஆர், 1 மே 1981 அன்று மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.

1971-1972ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது ஆகஸ்டு 30,1971 அன்றுமுதல் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்படும் என்று அப்போது ஆட்சியிலிருந்த கருணாநிதி திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 1974 இல் திமுக அரசு மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமுல்படுத்தியது.
1981 இல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கிய எம். ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசு 1987 இன் துவக்கத்தில் சாராயம் மற்றும் கள் கடைகளை மூடச் செய்தது. மதுவிலக்கு அமுலில் இருந்த காலகட்டங்களில் கள்ளச் சாராய வியாபாரம் அதிகரித்து, கள்ளச் சாராயத்தைக் குடித்ததால் அதிகளவில் தமிழக மக்கள் உயிரிழந்தனர். அதனால் மதுவிலக்கை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மெத்தனாலை அருந்தியதால் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், 2002 ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மலிவுவிலை மது விற்பனையைத் தொடங்கியது. 2001 இல் மதுவிலக்கு நீக்கப்பட்டபோது, டாஸ்மாக் நிறுவனத்தை மொத்த விற்பனை நிறுவனமாக மாநில அரசு பயன்படுத்தியது.

திமுக, பாமக, மக்கள் நல கூட்டணி கட்சிகள் தங்களது 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தாங்கள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படுமென அறிவித்தன.ஆனால் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முழுமையான மதுவிலக்கு உடனடியாக சாத்தியமானது இல்லை; மதுவிலக்கு படிப்படியாகக் கொண்டுவரப்படும் என அறிவித்தது. தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றதும் 24 மே, 2016 அன்று 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அரசாணையிலும், மதுக்கடைகளை காலை 10 மணிக்குப் பதில் நண்பகல் 12 மணிக்கு திறப்பதற்கான அரசாணையிலும் கையெழுத்திட்டார். இதன் காரணமாக, இக்கடைகளின் வணிக நேரம் 12 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 1948-ஆம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வந்தது. 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அப்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிலைமையை சமாளிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க அண்ணா மறுத்து விட்டார்.

“அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது!’ என்று கூறினார். அதுமட்டுமின்றி, ‘மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்’என்றும் கூறி மதுவிலக்குக் கொள்கையில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது நடைமுறையில் இல்லை. 1980களில் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தனியார் மதுபான விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது; இதுவும் நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசே டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மூலம் மதுபானத்தை விற்பனை செய்து வருகிறது.

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் 2001-ல் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்தனர். கொத்து கொத்தாக மருத்துவமனைகளில் செத்து மடிந்தவர்கள் ஒருபுறம்..கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் 200க்கும் அதிகமானோர் கண் பார்வையையே பறிகொடுத்த கொடுமை இன்னொரு பக்கம். அதே 2001-ல் ரெட்ஹில்ஸ் அருகே கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து செத்து மாண்டு போயினர்.

கடந்த 2023-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டில் தற்போது போலவே கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக சுருண்டு விழுந்தனர். 2023-ல் 30க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தால் காவு கொள்ளப்பட்டனர். இப்போது கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வையிலிருந்து தவிக்கின்ற நிலையில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பேசுகிற யாராக இருந்தாலும் கூட அவர்களை அரசும் சரி, மக்களும் சரி பைத்தியக்காரர்களாகவே பார்க்கிறார்கள். இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநில ம் தமிழ்நாடு தான் என்று பேசிய கனிமொழி இடம் கேள்வி கேட்டு முற்படும்போது தவிர்த்து விட்டு செல்வதையே செயலாக வைத்திருக்கிறார் கனிமொழி. கள்ளுக்கடைகளை திறந்து விட்டால் என்ன என்று ஒரு பக்கம் கேள்விகளும் நிலையில் திறந்து விட்டால் டாஸ்மாக் வியாபாரம் குறைந்து வடும் அதனால் யாருக்கு நட்டம் அரசியல்வாதிகளுக்கு தான் நட்டம் எப்படி என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான ஆலைகளும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. இப்படி பிணங்கள் மீது ஏறி கண்ணாமூச்சி விளையாடுகிற அரசியல்வாதிகளாகத்தான் அனைத்து அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். சீமானை போல, பிரேமலதா போல அத்தி பூத்தார் போல் ஒன்று இரண்டு பேர் இருக்கிறார்கள். இப்படியே போனால் மக்களின் நிலை என்ன? மண்ணாய் போவதை தவிர வேறு வழி இல்லை. இந்த நாற்றம் எடுக்கும் அரசியலையும் கவுச்சி வாடைகளையும் களைய யாராவது வர வேண்டும். யார்? வருவார் பார்க்கலாம்