Save 20% off! Join our newsletter and get 20% off right away!

3 லட்சம் ரூபாய் பழைய மின்விளக்குகளை…31,140 ரூபாய்க்கு ஏலம் விட்ட நகராட்சி!- ராசிபுரம் அவலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி சார்பில் நகரில் உள்ள 27 வார்டுகளில் செயல்பாட்டில் இருந்து வந்த பழைய மின்விளக்குகள் சுமார் 1.25 கோடி மதிப்பில்  புதிய றீமீபீ மின்விளக்குகளாக மாற்றி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

 இந்நிலையில் அலுமினிய பொருட்கள் நிறைந்த பழைய மின்விளக்குகள் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் இது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவன நல்வினைச் செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

 ராசிபுரம் நகராட்சி பகுதி முழுவதும் இதுவரை டியூப் லைட்டுகள், சிஎம்எல்பல்புகள் போன்றவை சாலைகளில் பயன்பாட்டில் இருந்து வந்தன .

மின் நுகர்வு அதிகரிப்பை கருத்தில் கொண்டு மின் செலவை குறைக்க எல்.இ.டி பல்புகள் மாற்றியமைக்க நகராட்சி முடிவு செய்தது .

 நகரில் உள்ள 27 வார்டுகளிலும் மொத்தம் உள்ள 1863 விளக்குகளையும் மாற்றியமைக்க சுமார் 1.25 கோடி மதிப்பில் புதிதாக எல்இடி விளக்குகள் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன .

  ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பல்பு செட்டுகள் திரும்ப எடுத்துக் கொண்டு புதிய பல்புகள் பொருத்த வேண்டும் என்று விதிமுறை அடிப்படையில் ஏலம் விடுபட்டுள்ளது .

குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பு மிக்க *1863 பழைய மின்விளக்குகளின் உதிரி பாகங்களின்*
செம்பு, அலுமினியம், இரும்பு ஆங்கில், கிளாம்பு, போல்ட், நட்டு, குண்டு்பல்பு,  டியூப் லைட்,  பெரிய போக்கஸ், சின்ன போக்கஸ், பழைய ஒயர்கள் போன்றவை மிகவும் மலிவு விலையில் ரூபாய் 31140 க்கு மட்டும் இராசிபுரம் நகராட்சியால் விற்பனை செய்யப்பட்டு நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தாய் சேய் நல விடுதி கட்டிடத்தில் இருந்து *லாரியில் தற்போது ஏற்றப்பட்டு வருகிறது

 இதனால் பயன்பாடற்றது என அகற்றப்பட்ட பழைய பல்புகள் ரூபாய் 31,140-க்கு ஏலம் விடப்பட்டுள்ளது .

 ஏற்கனவே ஏலம் விடப்பட்ட நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த பழைய பல்புகள் நகராட்சி வளாகத்தில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

 இதனை சமூக நல அமைப்பினர் பலரும் சமூக ஊடகங்களில் எடுத்து வெளியிட்டனர்.

 சுமார் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை மதிப்பில் இருக்கும் என்றும் இதை குறைந்த விலைக்கு நகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டுள்ளதாக கூறி உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

– சங்கர்ஜி