மலையாள திரைதுறையில் கடந்த சில தினங்களாக பாலியல் புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன… பிரபல நடிகர்கள் மீதும் இயக்குனர்கள் மீதும் தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் முக்கியமாக மலையாள நடிகர்கள் அம்மா என்ற அமைப்பு உள்ளது நடிகர்கள் அமைப்பு அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் மீது பெண் பாலியல் வழக்கு தொடர்ந்து உள்ளார் அவர் தொடர்ந்து அந்த பெண்ணை தகாத முறையில் பேசியதாக சொல்லப்படுகிறது மேலும் மலையாளத் திரை உலகின் நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ முகேஷ்,நடிகர்கள் ஜெயசூர்யா,மணியன் ராஜு போன்றோர் தன்னை 2013 ஆம் ஆண்டு பாலியல் சீண்டல் செய்ததாகவும் ,அதனால் தான் மலையாள சினிமா உலகை விட்டே சென்றதாகவும் அவர்கள் மீதும் நடிகை புகார் அளித்துள்ளார் இந்த ஒரு விஷயம் பூதாகரமாக வெடித்ததால் மலையாள திரைப்பட சங்கமான அம்மா கலைக்கப்பட்டுள்ளது, அதன் தலைவராக மோகன்லால் இருந்தார்,அவருடன் அனைவரும் ராஜினாமா செய்தனர்…இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மலையாளத்தில் உள்ள நடிகைகள் தாமாக முன்வந்து தங்களது புகாரை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவர்ச்சி நடிகை மீனு நடிகர் முகேஷ் எம்எல்ஏவுக்கு எதிராக பாலியல் புகார் கூறியிருந்தார் ஆனால் அந்த புகாரில் உண்மையில்லை என்று அறிக்கை வெளியிட்டார் இந்த புகாரை தொடர்ந்து நடிகர் முகேஷ் தனது எம்எல்ஏ பதவி மற்றும் கேரளா அரசின் சினிமா கொள்கை அமைப்பு குழுவில் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாரத ஜனதா கட்சியினை வலியுறுத்தி வந்தனர் இதே கருத்தை வலியுறுத்தி மாநில மகிலா காங்கிரஸ் கொல்லத்தில் நடிகர் முகேஷ் வீடு முற்றுகையிட்டு ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்திய அவரது உருவ பொம்மை எரித்தனர் இந்நிலையில் நேற்று அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது வெகு நேரமாக எச்சரித்தும் கலையாத போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடி அடி நடத்தி கலைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இந்நிலையில் கேரள அரசின் கொள்கை அமைப்பு குழுவிலிருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது இந்த குழுவை கடந்தாண்டு கம்யூனிஸ்ட் அரசு உருவாக்கியது இந்த குழுவில் முகேஷ் எம்எல்ஏ மஞ்சு வாரியார் பத்மப் பிரியா போன்றோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது …மேலும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளதால் ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளய திரைஉலகை ஒரு சுனாமி போல ஆற்றி வருகிறது பிரபல இயக்குனர்கள் பல பேர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன திரை உலகமே அரண்டு போய் உள்ளது யார் எப்பொழுது புகார் கொடுப்பார் என்று தெரியாமல் விழி பிதிங்கிஉள்ளனர்…
– பகவதி முருகன்
Leave a Reply