‘மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்திய குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.மேலும் இந்த மூன்று மாத காலங்கள் ஏற்கனவே கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சேர்ப்பு, புதுப்பித்ததல் இயக்கமாக இருக்கப் போகிறது எனவும், குழுவில் முடிவு செய்து இருப்பது போல ஒரு பூத்திற்கு 200 பேர் சேர்க்கப்பட வேண்டும் ,ஆகவே தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2026 தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவை பெறுவதற்கான ஒரு காலகட்டம். அதற்கான பணியும், கட்சியின் தலைமையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும் பணிகள் இருக்கும்’ என தெரிவித்தார்.
மேலும், ‘ கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தென் சென்னை போன்ற பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் இருந்த குற்றச்சாட்டு, பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் தேர்தலுக்கு முன்பாக திருத்தப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற குளறுபடிகள் உள்ளது. ஆகவே இந்த காலகட்டத்தில் நாம் வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்ப்பதோடு வாக்கு செலுத்த தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் அவர்களுடைய வாக்குகளை செலுத்தி உள்ளார்களா என தேர்தல் ஆணையம் சரிபார்த்து வருகிறது. அதனை சேர்த்து பார்ப்பதற்கான காலகட்டம் இது. அதில் எங்களுடைய கவனம் முழுமையாக இருக்கும்.
மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, நொண்டிக்குதிரைக்கு சறுக்குகின்றது சாக்கு என்று சொல்வார்கள். அந்த மாதிரியாக அவர்கள் இஷ்டத்திற்கு பல்வேறு திட்டங்களிலே நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள். சென்ற 10 ஆண்டில் மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்து, ஏற்கனவே பல முறை பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்கள் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறார்கள். ஆகவே மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றது போல செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
மத்திய அரசுதான் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறை, நீதிமன்றம், கம்யூனிகேஷன் நெட்வொர்க் என இவை அனைத்துக்கும் செலவு செய்கிறது. நாம் சாலை போடும்போது வேலைவாய்ப்பும் வருகிறதல்லவா, அதில் நம்ம ஊர் ஆட்களும் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே மத்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக அதிகப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமல்ல நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தி மத்திய அரசாங்கம் எந்தவித செலவையும் எந்த ஒரு மாநிலத்திற்கும் செய்ய முடியாது எனவும் அவர்கள் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை வைத்து தான் செய்ய முடியும். விதிமுறைப்படி அவற்றை செய்து கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக செயல்பட்டு கொண்டிருக்கின்றார். இதில் தமிழக பாஜக என்பது தனி அல்ல. அகில இந்திய பாஜகவின் ஒரு அங்கம் தான். மூன்று லட்சம் கோடி ரூபாய் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும்.
நான் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது பொய். நான் விஜயை விமர்சிக்கவில்லை. அவரின் மெர்சல் படத்தில் சொன்ன பொய்க்கு எதிராக தான் அறிக்கை கொடுத்தேன். விஜய்க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. அந்த படத்தில் சொல்லப்பட்ட பொய்யை கதைக்காக சொன்ன விஷயத்தை நாங்கள் பஞ்சர் செய்துள்ளோம் அவ்வளவுதான்.
ஆகவே, விஜய் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொன்னவுடனேயே நான் வரவேற்றன்’ என தெரிவித்தார்.
‘பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா இன்று கோவை வந்து பாலக்காடு செல்கிறார். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச்.ராஜா அவர்கள் தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை வைத்து இக்குழுவும் கட்சியில் உள்ள அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்’ என தெரிவித்தார்.
இந்த குழுவில் இடம் பெறாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ‘நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறேன். நான் சுமார் நான்கரை ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றினேன். முழு நேரமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் காரியகர்த்தாவாக தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். இடைக்கால தலைவர் என பல பெயர்கள் பேசப்பட்டாலும் அவை அனைத்தும் யூகங்கள் தான்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி மகிழ்ச்சியாக கட்சியில் பணியாற்றி வருகிறேன். இந்த கட்சி தான் என்னை ஆளுநர் எனும் உயர் பதவியில் அமர வைத்தது. அதற்கு நன்றி உணர்வோடு செயல்பட்டு வருகிறேன். கட்சிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் பணியாற்றி வருகிறேன் என பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசியவர், ‘தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளன. அவை தங்களது விரிவாக்க பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். இதனை புதிய முதலீடாக கருத முடியாது.
சம்மரிக்க்ஷா அபியான் திட்டம் என்பது குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும். இதற்கென பிரத்தியேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் நிதி மற்றும் கேட்கிறது. அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்ப்பிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது.
தமிழ் மொழிக்கு பிரதமர் அளித்துள்ள மரியாதையை போல தமிழகத்தில் உள்ள தலைவர்கள் கூட கொடுத்ததில்லை.
ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் தான் நமது உயிர், நமது வாழ்வு, அதே நேரத்தில் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாது என தமிழ் தாய் நினைப்பதில்லை.
மலையாள திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக நாங்களும் குரல் கொடுத்துள்ளோம். பெண்கள் மீதான பாலியல் எந்த துறையில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தை துவங்கியுள்ள விஜய், ஷீரடி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற அடிப்படையில் கடவுள் நம்பிக்கையோடு அவர் செயல்படுவது வரவேற்கத்தக்கது. கடவுள் இல்லை எனும் நாத்திக கொள்கை பேசும் மாநிலத்தில் இருந்து ஷீரடி கோவிலில் தரிசனம் செய்து மக்கள் சேவை செய்வது வரவேற்கத்தக்கது. இனிமேல் ஆன்மீகம் அல்லாத அரசியல் என எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது’ என தெரிவித்தார்
Leave a Reply