தேனி-கக்கூஸ் போல் செயல்பட்டு வரும்,அரசு மதுபான பார்கள்…

தேனி மாவட்டத்தில் 82 அரசு மதுபான பார்கள், மனமகிழ் மன்றங்கள், ரெக்ரேஷன் கிளப்புகள் செயல்பட்டு வருகிறது.

இவைகள் முழுவதும் சுத்தம், சுகாதாரம், குடிநீர் கழிப்பிடம் வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட 40 அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுகிறது.

மனமகிழ் மன்றங்கள் மற்றும் ரெக்ரேஷன் கிளப்புகளில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் மதுபானங்கள் அருந்த அனுமதி உள்ளது.

ஆனால் அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு 24 மணி நேரமும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மதுபானங்கள் உரிய அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்கின்றனர்.

இதைவிட ஒரு படி மேலே சென்று தேனி மாவட்டம் முழுவதும் 82 அரசு மதுபான பார்கள் 50  அனுமதி பெற்று இயங்குகிறது.

 32 அரசு மதுபான பார்கள் உரிய  அனுமதியின்றி சுகாதாரம், சுத்தம், கழிப்பிடம்,  உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகள் இன்றி கக்கூஸ் போல் மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் 50 அரசு மதுபான பார்கள் உரிய அனுமதி  பெற்று சுத்தம் இன்றியும், சுகாதாரம் இன்றியும் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல்,
32 அரசு மதுபான பார்கள் உரிய அனுமதி பெறாமல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி சுத்தம் இன்றியும் சுகாதாரமின்றியும் அரசு மதுபான பார்கள் செயல்படுவதால் தேனி மாவட்ட மருத்துவ மற்றும் உணவு பாதுகாப்பு  துறை அலுவலர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பார் உரிமையாளர்களுக்கும் உரிய அரசு விதிமுறைகளை பின்பற்றி மதுபான பார் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால் பார் உரிமையாளர்கள் சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்யாமல் மதுபானப்பார்கள் செயல்பட்டு வருகிறது

எனவே தமிழக அரசின் உரிய அரசு அனுமதி பெற்றும் சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றியும் செயல்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்தும் பார் குரிய சுத்தம் சுகாதாரம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வரும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

-ஜெயபால்