Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கும், கரூர் மாநகராட்சி!

கரூர் நகரத்தின் பள்ளிகள் தொழிற்சாலைகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடம் கரூர் நகரம்

இந்த நகரத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் வேலைக்காகவும் தொழிலுக்காகவும், வியாபாரத்திற்காக வரும் மக்கள் கரூர் நகரத்தை நோக்கி வந்து செல்கின்றனர் தினம் தோறும் குறிப்பாக காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அதிகப்படியான  வாகனங்களும் கரூர் நகரத்தை நோக்கி வரும் பொது மக்களும் அதிகப்படியான இரண்டு சக்கர வாகனத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பள்ளி வாகனங்களும் வந்து செல்கின்றனர்.
 சில காலங்களில் வண்டி வாகனங்கள் குறைவாக இருந்தது தற்போது மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வண்டி வாகனங்களும் அதிகப்படியாக வந்துவிட்டது.
 இந்த சூழ்நிலையில் கரூரில் நோக்கி அதிகப்படியான வாகனங்களும்  வருவதால் கூட்ட நெரிசல்கள் காலை மாலைகளும் மிகவும் அதிகமாக உள்ளது.

 இந்த வேலையில் கரூரில் உள்ள கடைகள் அனைத்தும் ஒரு அடிப்படை வசதி ஒன்று பார்க்கின் வசதி கூட இல்லாமல் இருந்து வருகிறது. செங்குந்தபுரம் ஜவகர் பஜார்  பழைய பஸ் ஸ்டாண்ட் லைட் ஹவுஸ் கார்னர் பகுதிகளில் இரு புறங்களிலும் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் குறிப்பாக லைட் ரோஸ் கார்னர் ஜவஹர் பஜாரில் மிகப்பெரிய ஆக்கிரமிப்புகள் உள்ளது கடைக்காரர்கள் தங்களது விளம்பர  பேனர்களையும் மக்கள் செல்லும் நடைபாதைகளிலும் கடைக்கு முன்பாகவும்  வாகனங்கள்  நிறுத்தி வைக்கப்படுகிறது. நகரத்தின் நோக்கி வரும் மக்களும் நகரத்தை விட்டு வெளியூர் செல்லும் வாகனங்களும் கடைக்காரர்கள் சாலைகள் ஆக்கிரமிப்பால்  மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆக்கரைப்புகளை ஜவஹர் பஜார் அருகாமையில் உள்ள மாநகராட்சி ஆணையருக்கும் நகர அமைப்பு பிரிவுக்கும் இருவரும் கதவுகளையும் சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கதவுகளை தட்டி தட்டி பார்த்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் புகார் தெரிவித்தும் காதில் கேட்காத மாதிரி அதிகாரிகள் நகரத்தை உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

ராஜா காலத்தில் இன்னொரு நாட்டு மன்னர்களுக்கு எப்படி புகார்களை தகவல்களை புறா  மூலம் கடிதம் அனுப்பினார்களோ அதே போல் தற்போது சமூக ஆர்வலரும் பொதுமக்களும் தாளில் கரூர் மாவட்ட ஆட்சியர் ராஜாவிடம் புகார் அளித்து அந்தப் புகார் கரூர் நகரத்தில் உள்ள ஆணையர்  சிற்றரசிக்கு அனுப்பி வைக்கப்பட்டது அந்தப் புகாரை பார்ப்பது கூட நேரம்  இல்லை ஏன் என்று பார்த்தால் ஆக்கிரமிப்புகள் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்தி வருகின்றனர்.

இதற்கு அப்பாவி பொதுமக்கள் பலிகடா ஆகின்றன லைட் ஹவுஸ் கார்னரில் கண் முன்னாடி ஒரு ஆக்கிரமிப்பு செய்ததால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது  என்று கூறினார்கள்  உடனடியாக மாநகராட்சி அதிகாரி லைட் ஹவுஸ்  கார்னர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்று மாறும் கூறினார்கள் உடனடியாக அந்த பகுதி கவுன்சிலர் கணவர் பாலமுருகன் அதிகாரிகளின்  தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு  ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது நீ அந்த இடத்தை விட்டு சென்று விடு என்று கூறிவிட்டனர்.

ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்த்த  பொதுமக்கள் சிலர் இந்த இடம் மிகவும் விபத்துக்குள்ளான இடம் அதனால்தான் அரசு ரவுண்டானாவை சுருக்கி விட்டது மீண்டும் நீங்கள் எதற்கு இவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று மறுபடியும்  கேட்கும் போது அதிகாரிகள் உஷாராகி  அதிகாரி மீண்டும் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து ஆட்களை வர வைத்து அகற்ற தொடங்கினார். ஆக்கிரமிப்பு கடைக்காரர் உறவினர்கள் திமுகவைச் சேர்ந்த நபர்களாக இருந்ததால் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்கள் அந்த இடத்திற்கு வந்து அதிகாரிகளை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆளுங்கட்சி அல்ல கைகள் உடனடியாக கவிதா கணேசன் மேயருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆக்கிரமிப்பு செய்த அதிகாரிகளிடம் ஃபோனை கொடு என்று கூறி உடனடியாக அதிகாரிகளும் தொலைபேசியை வாங்கி பேசினார்கள் அப்பொழுது மேயர் கவிதா கணேசன் அவர் எங்க ஆளு விட்டுவிடு இல்லை என்றால் உன்னை நான் இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற்று வேன் என்று கூறியதால் அதிகாரிகளும் மனக் குமுறலில் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி பிரதிநிதிகள் பதவி பிரமாணம் செய்யும்போது என்னுடைய விருப்பு வெறுப்பு இன்றி நான் மக்களுக்கு பணி செய்வேன் என்று உறுதிமொழி ஏற்கின்றனர். ஆனால்  மக்கள் பிரச்சனையை கூறினால் வெறுப்பாக தெரிகிறது மேயருக்கு

மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினால் சர்வதிகார ஈடுபடும் மேயர் கவிதா கணேசன்

மேய்கின்ற மாடை நக்கரம் மாடு கெடுப்பது போல் நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக்கூடாது இல்லை என்றால் வேறு இடத்திற்கு நீ ஓடுவாய் என்று கூறும் மேயர் கவிதா கணேசன்

கரூர் நகரத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றுமா மாநகராட்சி நிர்வாகம் நல்ல  சீட்டு எடுக்குமா பச்சைக்கிளி  ஜோசியக்காரிடம் ஜோசியம் பார்க்கும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் நல்ல சீட்டை எடுக்குமா என்று எதிர்பார்க்கும்

– ச.ரகுமான்