கேடிபில்லா கில்லாடி ரங்கா பட வெற்றிக்குப் பிறகு சிவகாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்கிறது பச்சை ராஜா தயாரிப்பு. ஆனால் படம் துவங்க வில்லை.
அக்ரிமெண்ட் இருப்பதால் ஒவ்வொரு படம் முடியும் போதும் சிவகாவும் படத்தை துவங்க கேட்டும் பச்சை ராஜா அசைந்து கொடுக்கவில்லை.
சிவகாவின் மார்கெட்டும் வளர்ந்து வருகிறது. ஆண்டுகள் கடந்த பின்னும் பச்சை ராஜா தரப்பு படத்தை துவங்குவதாக இல்லை.
சிவகாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வர, பச்சை ராஜா அடுத்த படம் செய்து விடலாம் என்று வருகிறார்.
கேடி பில்லா பட சமயத்தில் என்ன சம்பளமோ அது தான் சம்பளம் என்று கண்டிஷன் போட, அதிர்ந்து போகிறார் சிவா.
அப்புறம் தான் தெரிகிறது பச்சை ராஜாவின் திட்டமே அதுதான். சிவாவின் மார்கெட் உயரும் வரை காத்திருந்து, அதன் பிறகு குறைந்த சம்பளத்தில் அவரை வைத்து படம் எடுத்து பெரிய லாபம் பார்ப்பது.
அதே சமயம் சிவாவின் மார்க்கெட்டையும் சரிப்பது. சினிமாவைப் பொறுத்தவரை முந்தைய படத்தின் சம்பளம் தான் அளவுகோல் என்பது குறிப்பிடதக்கது.
ஆனால் சிவா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வேறு படங்களில் நடிக்கிறார்.
அக்ரிமெண்டை காட்டி அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார் பச்சை ராஜா. என்னிடம் என் ஓ சி வாங்காமல் சிவாவை வைத்து படம் எடுக்கக் கூடாது என மிரட்டுகிறார்.
வேறுவழியில்லாமல் சிவா தனது நண்பர் ஆர் டி ராஜாவை தயாரிப்பாளராக்கி ரெமோ படத்தை துவங்குகிறார்.
அந்தப் பட படப்பிடிப்பு, பட வெளியீடுகளில் கடுமையான பிரச்சினைகளை சந்தித்தது. அதற்கு காரணம் பச்சை ராஜா தரப்பு.
அந்த காலகட்டத்தில் சிவப்பு அரக்கனும் சைலண்டாக இருந்த நேரத்தில் பச்சை ராஜாவின் கை தான் ஓங்கியிருந்தது. தயாரிப்பு, வினியோகம் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அந்தக் குடும்பம் கையில் வைத்திருந்த காலம்.
பல சிக்கலகளை சந்தித்த ரெமோ பட ஆடியோ லாஞ்சில் சிவா அழுதே விட்டார்.
சீமராஜா படத்திற்கு பிறகு சிவாவின் சம்பளத்தை ஏற்றித் தருவதாக சொல்ல உடன்பாடு ஏற்படுகிறது. ஆனாலும் அன்றைய மார்கெட் சம்பளத்தை விடவும் குறைவான சம்பளம் தான் பேசப்படுகிறது. ஆனாலும் சிவா ஒத்துக் கொள்கிறார்.
எப்படியாவது இதிலிருந்து வெளிவந்தால் போதும் என்று நினைத்து குறுகிய காலத்தில், ஸ்கிரிப்ட் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் மிஸ்டர் லோக்கல்.
நயன், ராஜேஷ் அனைவருமே அக்ரிமெண்ட் மூலம் லாக் செய்யப்பட்டவர்கள் தான்.
படத்திற்காக 15 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், அதையும் முழுதாக கொடுக்கவில்லை பச்சை ராஜா.
ஆனால் வருமான வரி தாக்கலில், சிவாவிற்கு 15 கோடி கொடுத்ததாக கணக்கு காட்ட, ஐடி டிபார்ட்மெண்டில் இருந்து சிவாவிற்கு நோட்டீஸ் வந்தது.
வேறுவழியில்லாமல் சிவா கோர்ட்டில் கேஸ் போட, பணத்தை செட்டில் செய்துவிட்டு படங்களை ரிலீஸ் செய்து கொள் என்று சொல்லிவிட்டது கோர்ட்.
பச்சை ராஜாவை வைத்து சிவாவை வளர விடாமல் மார்கெட்டை காலி செய்ய முயற்சி நடந்திருக்கிறது.
ஆனாலும் எவ்வளவு முயற்சித்தும் சிவாவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. கடவுள் இருக்கான் குமாரு…
இன்று பல முயற்சிகள் செய்து கங்குவா எனும் குப்பை படத்தை ஓட வைக்க முயற்சி செய்தார்கள்,ஆனால் கர்மா சும்மா விடுமா..
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…”
பச்சை ராஜாவும் கலைக்குடும்பமும் சாதாரண ஆட்கள் கிடையாது…
– சு.பகவதி முருகன்
Leave a Reply