ஒபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம் வாய்ஸ்…
எடப்பாடியை நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால் அதிமுக இணையக்கூடாது என நினைப்பவர்கள் தானாக அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள் டிசம்பரில் அனைவரும் ஒன்றினைந்து விடுவார்கள் . அப்போது தலைமை யார் என்று தெரியும் என தஞ்சையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சையில் கட்சி தொண்டர்களுடன் இனணந்து வைத்திலிங்கம் 69 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம்
99 சதவீதம் தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும் என் நினைக்கிறார்கள்.
2026 அம்மா ஆட்சி அமையும்.
எடப்பாடியை நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால் அதிமுக இணைய கூடாது என நினைப்பவர்கள் தானாகவே அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள்.
அதிமுக இணையும் போது தலைமை யார் என்று தெரிந்துவிடும்.
சசிகலா, எடப்பாடி, டிடிவி, ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றினைய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் ஈன வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இபிஎஸ் தரப்பில் சேகர் வாய்ஸ்…
அதிமுகவிற்கு துரோகம் விளைவித்தவர் தான் வைத்திலிங்கம் 2016 தேர்தலில் தோல்வியுற்றார் அவர் தோற்றதற்கு காரணமே பன்னீர்செல்வம் தான் என ஜெயலலிதாவிடம் தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றவர். 25 ஆண்டு காலம் சோழமண்ட தளபதி என கூறிக்கொண்டு எந்த கட்சி பணியும் செய்யவில்லை. தன்னைவிட மேலே யாரும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. வைத்தியலிங்கம் சொன்னதில் ஒரே ஒரு உண்மை என்னவென்றால் 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியது மட்டுமே. அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமையும். வைத்திலிங்கம் தற்போது எந்த ஒரு கட்சிகளையும் கிடையாது கரை வெட்டி கூட கட்ட முடியாது அவர் காரில் கொடி கட்ட முடியாது ஒரு சிலர் மட்டுமே அவருடன் உள்ளனர் அவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள் அப்போது வைத்தியலிங்கம் பன்னீர்செல்வம் போன்ற ஒரு சிலர் மட்டுமே தனி மரமாக இருப்பர்.
– இரா.பெரியார்
Leave a Reply