மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள 37 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய
இலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மகேந்திரன், தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி கண்ணன், மதுரை ஆவின் துணை பொது மேலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், ஆவின் மேலாளர் செல்வம், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ரிஜ்வானா பர்வீன், முன்னிலையில் ஊராட்சி செயலர் போஸ் தீர்மானங்களை வாசித்தார். இதில் ,
திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்
றப்பட்டது. மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பொது சுகாதார கேடு, அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து கிராம மக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply