Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரைகூடுதலாகி வரும் பெண் சிசு கொலை…கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா பகீர்!

பெண்சிசு கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான் எனவும் – மதுரையில் பெண்சிசு கொலை மீண்டும் கூடுதலாகி வருவதாக – உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்
துள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ,
சேடபட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில்
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ,
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது., கூடுதல் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட இந்த கிராம சபை கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக, கிராம சபை கூட்டத்தில், பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா:
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான அநீதி என்பது பாலியல் அநீதி மட்டுமல்ல, பெண் சிசுக் கொலை, பெண்சிசுவை கருவிலேயே அழிப்பதும் தான்.
மதுரையிலேயே உசிலம்பட்டி பெண்சிசு கொலைக்கு பெயர் போனது என்பது உலகம் அறிந்த ஒன்று, அதை தடுத்துக் கொண்டு வருகிறோம், ஆனால், மீண்டும்
கூடுதல் ஆகி வருவதாக தகவல் வருகிறது.
அது நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்,
இது நம் ஒவ்வொரு பெண்களின் கடமை, எல்லா பெண்களுக்கும் இதில் கடமை உள்ளது.
பெண்சிசு கொலை
 நடக்க முதன்
மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான், பெண்களுக்கு எதிராக பெண்கள் தான் நிறைய பேர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.,
இப்போது எல்லா குழந்தைகளும் சமம் தான், சம உரிமை கொடுக்க வேண்டியவர்கள் பெண்களுக்கு எதிரான தீமை செய்யக் கூடாது என, நினைத்தால்
 சம உரிமையை முதலில் கொடுக்க வேண்டும்.
பெண்சிசு கொலை இருக்க கூடாது, பெண்
சிசுகளை கருவிலேயே அழிப்பது இருக்க கூடாது. பெண்கள்
 கிராம சபை கூட்டத்திற்கு ஆர்வமுடன் வந்துள்ளீர்கள் நீங்கள் அனைவரும் நங்கு முன்னேறி உள்ளீர்கள் என தெரிகிறது.
நீங்கள் முன்னேறினால் மட்டுமே மாற்றம் பெண்களுக்கான உரிமையை எப்போதும் பெண்களால் மட்டுமே முன்
னெடுக்கப்பட வேண்டும்., அப்போது தான் கிடைக்கும் நமது உரிமையை நாம் தான் வாங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பெண்
களுக்கான உறுதி
மொழியை எடுக்கிறோம், உறுதி மொழி எடுப்பதோடு நிறுத்தாமல் அதை செயல்
முறைபடுத்த வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.

– நா.ரவிச்சந்திரன்