தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வரும் நிலையில் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஓரிரு நாளாக கன மழை பெய்து வந்தது இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்,
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 33,000 மணல் முட்டை முன்னேற்பாடு செய்திருப்பதாக கலெக்டர் கூறிய நிலையில் 33 ஆயிரம் மணல் மூட்டைகள் எங்கே இருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 33 ஆயிரம் மணல் மூட்டைகள் 11 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்
வடகிழக்கு பருவ மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறியப்பட்டு அனைத்து அரசு துறைகளையும் துறை சார்ந்த அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுக்காளிலும் 25 ஒருங்கிணைந்த மண்டல குழுக்கள் மற்றும் 412 கிராம அளவிலான குழுக்கள் அமைத்து ஏற்படுத்தப்பட்டு அவ்வப்போது களநிலவர்கள் கண்டறியப்பட்டு வந்த நிலையில் மேலும் பேரிடர் பாதுகாப்புகளை கையாளுவதற்காக 30 ஜெனரேட்டர்கள் 178 பொக்லைன் இயந்திரங்கள் 28 டிராக்டர்கள் 84 டிப்பர் லாரிகள் 453 மர அறுப்பான்கள் 25 டார்ச் லைட்டுகள் 68 லைப் ஜாக்கெட்டுகள் 87 உயிர் மிதவை 33 ஆயிரத்து 150 மணல் மூட்டைகள் 31 ஆம்புலன்ஸ்கள் ஆகிய பற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமகி அணை மணிமுத்தா அணை மற்றும் திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணை ஆறு மற்றும் சங்கரா புறத்தில் மணி நதி ஆறு உளுந்தூர்பேட்டை சேஷநதி அணை உள்ளிட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறிய நதி முதல் குளம் குட்டைகள் ஏரிகள் என நீர்நிலைகள் உள்ளன, இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை குறித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடாக 33 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் மூட்டைகள் எங்கே என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்ட மாவட்ட நிர்வாகம, ஏனென்றால் ஒவ்வொரு காவல் நிலையத்தில் மீட்பு பணி தயாராக உள்ளது என மேலும் போட்டோ சூட் நடத்துவது போல் போட்டோ மட்டுமே வெளியாகிறது எனவும் அதற்கான நடவடிக்கையாக எந்த ஒரு மணல் முட்டையும் சரி அதற்கான தயார் நிலையில் உள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரி மக்கள் மத்தியில் காணப்படவில்லை என சமூக ஆர்வலர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது,
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக மற்றும் நில அளவை நிலவரித் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்ட மதுசூதனன் ரெட்டி ஐஏஎஸ் அவர்கள் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளான உளுந்தூர்பேட்டை சங்கராபுரம் கல்வராயன் மலை திருக்கோவிலூர் என பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு இறுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கியது மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரையும் லெப்ட் ரைட் வாங்கினார் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதனன் ரெட்டி சம்பவம் இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியது .
ஏனென்றால் தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்னென்ன பணிகள் மேற்கொள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் என்னென்னவென்று ஆய்வு செய்தபோது அதிகாரிகள் சொல்வது ஒன்று நடப்பது ஒன்று என மாவட்ட கலைக்டர் மற்றும் பல்வேறு அதிகாரிகளை கேள்வி எழுப்பியுள்ளார் மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது ஒவ்வொரு முறையும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்பு பணிகளை தயார் நிலையில் வைத்துள்ளோம் என அதற்கான ஆதாரபூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகும் ஆனால் இந்த முறை பெரிதளவில் இல்லை என்றாலும் வாய்மொழியாக அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டாலும் கூட எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரோ நாடாளுமன்ற உறுப்பினரோ தனது அலுவலகத்திற்கு பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க இதுவரை அறிவித்ததில்லை ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் தான் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயனோ தனது அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் தொலைபேசி எண்ணை தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்
இது மாவட்ட நிர்வாகமா அல்லது அரசியல் நிர்வாகமா என கூறும் அளவிற்கு மாவட்ட நிர்வாகம் ஒருபுறம் இருக்க இங்கு அரசியல் நிர்வாகத்திற்கு தான் முழுமூச்சாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் என பேசப்படும் வருகிறது,
மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்றாலும் கூட திமுக அரசியல் பிரமுகர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யும் இந்த மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு முன்வந்து விசாரிக்கும் அளவிற்கு எந்த ஒரு முன்னேற்றமும் அடையவில்லை என அரசியல் தலையில் இருப்பதால் அதிகாரிகளால் எந்த நடவடிக்கை எடுக்கும் எடுக்க முடியவில்லை எனவும் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்,
தற்போது வடகிழக்கு பருவமழையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெறும் வாய் வார்த்தையில் மட்டும் சொன்ன மாவட்ட நிர்வாகம் வரும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழைக்காவது உண்மையாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவதுமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்படுமா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருவது வாடிக்கையாக உள்ளது,
– இரா.நந்தகோபாலகிருஷ்ணன்
Leave a Reply