எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர் பணி இறைவனுக்கு ஒப்பான பணியாக கருதப்படும் இந்த விஞ்ஞான யுகத்தின் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரனின் செயல்பாடுகளால் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியே இன்று தலைகுனிந்து நிற்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஒன்றியத்திலுள்ளது டீஒரத்தூர் கிராம பஞ்சாயத்து, இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். 8ஆம் வகுப்புவரை கல்வி பயிலும் வாய்ப்புள்ள மேற்படி பள்ளியில், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மாணவ மாணவிகளை தண்ணிதொட்டி கழுவுவதும் குப்பை பொறுக்குவது வகுப்பறையை கூட்டுவது கழிவறைகளை சுத்தம் செய்வது என்று படிப்பை தவிர மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார்.
இதிலென்ன விஷயம் இருக்கிறது என்கிறீர்களா..? மேற்படி வேலைகளை முழுவதும் செய்ய பயன்படுத்துவது பட்டியலினத்தை சேர்ந்த மாணவ மாணவிகளைதான்! நீண்ட நாட்களாக இந்த நிகழ்வுகள் தொடரவே அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் சுபாஷ் என்பவர், தலைமை ஆசிரியர் ராஜேந்திரனை கண்டிக்க நீ உன் வேலையை பாரு என்று மூஞ்சில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார். அதன்பிறகு பட்டியலின மாணவ மாணவிகள் பள்ளியில் செய்யும் வேலைகளை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து தன் நண்பர்கள் மூலம் சமூக வலைதளங்களில் ரிலிஸ் பண்ணிவிட்டார். விஷயம் தெரிந்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து சமூக வலைதள பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்தும்படி டீல் பேசி சாதித்துவிட்டார்.
தலைமை ஆசிரியர் ராஜேந்திரனின் டீலிங் விஷயம் தெரிந்து அதிர்ச்சியான ஆசிரியர் சுபாஷ் வீடியோ புகைப்பட ஆதாரங்களை மாநில கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பிவிட்டார். அங்கிருந்து மாவட்ட, வட்ட கல்வி அலுவலருக்கு தெரிவித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பிவைத்தனர். ஆய்வில் சம்பவம் நடந்தது உண்மை என தெரியவர, தலைமை ஆசிரியர் ராஜேந்திரனையும் பட்டதாரி ஆசிரியர் சுபாஷையும் பணியிட மாற்றம் செய்துவிட்டனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மேற்படி பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். பள்ளியை தரம் உயர்த்த பல வாய்ப்புகள் வந்தும் அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்து வந்துள்ளார். பள்ளியில் நாளுக்குநாள் கற்பித்தல் திறன் குறைந்துகொண்டே போக, அருகிலிருக்கும் களமருதூர் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகின்றனர் பெற்றோர். அதெல்லாம் இருக்கட்டும் பள்ளி பராமரிபிற்காக ஒவ்வொருவருடமும் அரசாங்கம் ஒரு தொகையை அனுப்புகிறதே அதை என்ன செய்கிறார்கள்? வழக்கம்போல போலி பில் வைத்து கணக்கு காட்டிடறாங்க. அதனால பள்ளியில் உள்ள எல்லா வேலைகளையும் மாணவ மாணவிகளை செய்யச்சொல்லுகிறார்கள் போல. அதுவும் பட்டியலின பிள்ளைகள்தான் செய்யனுமாக்கும்? உங்களையெல்லாம் ஒரு பெரியார் இல்லை, ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது.
– இரா.நந்தகோபாலகிருஷ்ணன்
What’s your reaction?
Love1
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply