கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது அதன்படி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாண்டூர், ஆர்.ஆர்.குப்பம், எடைக்கல்,நகர் மன்னார்குடி, செங்குறிச்சி,காட்டுநெமிலி எம்.எஸ்.தக்கா (மூலசமுத்திரம்) உட்பட 7 கிராம ஊராட்சிகளை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது இந்த நிலையில் பாண்டுர் ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் , அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள், கிராமப்புற திட்டங்களில் கிடைக்கக்கூடிய உதவிகள் கிடைக்காது என கூறி கோஷமிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாலும் இதனால் ஏழை எளிய மக்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் நகராட்சியுடன் இணைத்தால் சொத்து வரி வீட்டு வரி குடிநீர் வரி உயரும் வாய்ப்பு உள்ளது எனவும் அது மட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 2019 ஆம் ஆண்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இது நாள் வரையிலும் மாவட்டத்தில் தொழில் பயிற்சி தொழிற்சாலையோ ஏழைகளின் மக்கள் வேலை வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது இது மட்டுமல்லாமல் இந்த தொகுதியில் பெருமளவு டெவலப்மெண்ட் திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை எனவும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக் கல்லூரி பொறியியல் கல்லூரி என எந்த வசதியும் இல்லாமல் இருப்பதினால் உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள ஏழு கிராம ஊராட்சியை சேர்ந்த மக்கள் கிராம ஊராட்சியில் வரக்கூடிய வேலை வாய்ப்புகள் என பல சலுகைகள் இழக்கப்படும் எனவும் கூறி உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி பாண்டூர், ஆர்.ஆர்.குப்பம், எடைக்கல்,நகர் மன்னார்குடி, செங்குறிச்சி,காட்டுநெமிலி எம்.எஸ்.தக்கா (மூலசமுத்திரம்)ஆகிய கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து காட்டுநெமிலி விருத்தாசலம் சாலை செங்குறிச்சி கிராம சாலை ,ஆர் ஆர் குப்பம் கிராம சாலை, உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் நடு ரோட்டில் அமர்ந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் தொடர்ந்து கிராமங்களில் இருந்து நகரங்களில் இணைப்பதற்கான வேலையை உடனடியாக கைவிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் கோரிக்கை வைத்தனர் இந்த போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினரும் செவியில் போட்டுக் கொள்ளாதவாறு செயல்பட்டு வருகின்றனர் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இந்த போராட்டத்தின் வாயிலாக ஏதேனும் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போலீசார் தரப்பிலிருந்து கூறி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள நகராட்சிக்கு அருகாமையில் இருக்கும் 7 கிராம ஊராட்சிகளிலும் நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கை குழந்தைகளுடன் பெண்கள் ஆண்கள் என பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த போராட்டம் குறித்து வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் என அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என ஏழு கிராம ஊராட்சி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது….
– இரா.நந்தகோபாலகிருஷ்ணன்
Leave a Reply