– இது கிருஷ்ணகிரி நிலவரம்!மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆனா மாவட்டத்தில கடுகளவு மரியாதை கூட கிடையாது. வேற யாரு நம்ம காவேரிப்பட்டினம் கே.பி.முனசாமிக்குதான் அதிமுக மாநில துணைப்பொதுச் செயலாளராக இருந்தாலும் தான் சார்ந்த சொந்த மாவட்டத்தில் செல்லாக்காசாக இருப்பதாக அதிமுகவினர் கோபத்தில் வெடிக்கின்றனர். ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி மூன்று தொகுதிகளை கொண்ட மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி செயலாளர் ஆனால் அவரை நிம்மதியாக அரசியல் பண்ணவிடுவதில்லை. கண்டபடி மூக்கை நுழைத்து அதிமுக என்ற ஒன்று இல்லாதபடிக்கு பண்ணிட்டார். மனம் நொந்துபோன பாலகிருஷ்ணரெட்டி மட்டுமல்ல பல நிர்வாகிகள் இருக்கற இடம் தெரியாம அமைதி ஆயிட்டாங்க.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக கூட்டணி ஒகே ஆனால் தன் மகன் சதீஷை நிறுத்தி எம்பி ஆக்கிவிட ஆசை வைத்திருந்தார். அது நடக்காததால் ஓசூரை சேர்ந்த ஜெபி என்கிற ஜெயப்பிரகாஷை நாக்கில் தேன் தடவி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆக்கிவிட்டார் எல்லா கட்சிக்கும் போய்வந்த ஜெயப்பிரகாஷ் இப்பொழுது இருப்பது அதிமுகவில்! எம்பி ஆகியே தீருவது என்கிற முடிவோடு இருபத்தி ஐந்து கோடியோடு வந்தாராம். அதில பதிமூன்று கோடிதான் செலவாச்சாம் மீதி பணம் எங்கே? என்ன ஆனது என்று ஆர்வமாக விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். தகுதியான பதில் எங்கே இருக்குனு தெரியல.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக தன்னுடைய அரசியல் அடிமையான அசோக்குமாரை அடையாளம் காட்டிட்டு, மாவட்ட செயலாளராக ஆக்டிங் பண்றார். அசோக்குமாரிடம் கட்சியினர் எதை கேட்டாலும் அண்ணனை போய் பாரு என்று வழியனுப்பி வைப்பார். கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் அசோக்குமார் சொந்தமா இரண்டு வார்த்தை பேசமுடியாது. பேசனும்ன்னா கே.பி.முனுசாமி அனுமதி தேவை இவரோட வாரிசு சதீஷ்க்கு கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அரசியல் பயிற்சி கொடுப்பதுதான் மாவட்டம் அசோக்குமாருக்கும், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்ச்செல்வனுக்கும் முழுநேர பணி! தமிழ்ச்செல்வன் மாமா திருப்பதி பிரபலமான மணல் வியாபாரி பணம்கொடுத்து சீட்டு வாங்கி பல கோடிகளை கொட்டி எம்எல்ஏ ஆனவர், ஊத்தங்கரை தொகுதியில தமிழ்ச்செல்வனுக்கு எதிர்ப்பு அதிகம் அதோட அதிமுக நிர்வாகிகள் இவர் மீது ஏக கடுப்புல இருக்காங்க. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமலானால் சதீஷை மாவட்ட செயலாளர் ஆக்குவது கே.பி.முனுசாமியின் திட்டம் அதில ஒரு கேவலமான விஷயம் கே.பி.முனுசாமிக்கு சம்பாதிக்க மட்டும்தான் தெரியும் செலவு பண்ண தெரியாது ஆனா நாட்டை ஆளமுடியுமா? என்று ஆசைப்படுகிறார். அவர் மகன் சதீஷ் பெரிய கஞ்சன் அவர் மாவட்டத்தையே ஆள துடிக்கிறார். மாவட்ட எம்ஜிஆர் மன் செயலாளர் தென்னரசும் மாவட்டம் அசோக்குமாரும் சமீபகாலமாய் தனி ரூட் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். அதாவது கே.பி.முனுசாமிக்கு தெரியாம எடப்பாடி பழனிச்சாமியிடம் சாதி ரீதியாக நேரடி தொடர்பு வைத்துக்கொள்வது எம்பி பதவி முடியும் தருவாயில் இருப்பதால் தம்பிதுரை பர்கூர் தொகுதியில் உள்ள அதிமுகவினர் மற்றும் வாக்காளர்களை பார்க்கும்பொழுதெல்லாம் வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆனா ஒரு விஷயத்தை எல்லோரும் சௌகரியமாக மறந்துவிட்டனர். அதிமுகவின் தற்போதைய நிலவரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
– வில்வன் வேம்பன் அரசன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply