கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது. பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஆனால் பெரும்பாலான ஊராட்சிகள் வளர்ச்சியும் மேம்பாடும் அடையாமல் இருப்பதற்கு அத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளான பீடிஓ வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,டெப்டி பிடிஓ,இன்ஜினியரிங், ஓவர் சி, ஒப்பந்ததாரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றனர் ஊராட்சியின் பல்வேறு வேலைகளில் நூதனமான முறையில் கொள்ளை அடித்து தன் சுய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர்
அதிலும் சில நேர்மையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்படி இருக்க
ராணிப்பேட்டை மாவட்டம்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஜெயசுதா என்பவர் செயல்பட்டு வருகிறார்
39 பஞ்சாயத்துக்கள் உள்ளடங்கிய ஆற்காடு ஒன்றிய அலுவலகம் ஆற்காட்டில் செயல்பட்டு வருகிறது இதில் ஒன்றிய குழு பெருந்தலைவராக புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவராக ஸ்ரீமதி நந்தகுமார்,
வட்டார வளர்ச்சி அலுவலராக சைபுதீன், கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு பீடி ஓவாக வெங்கடேசன், ஜோனல் பி டி ஓ செல்வம், மேல குப்பம் நந்தியாளம், அரப்பாக்கம், பூட்டுத்தாக்கு, கீழ்மின்னல், வேப்பூர், ஆயிலம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஓவர் சியாக, வளர்மதி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர் ஆற்காடு ஒன்றியத்திலுள்ள
பெரும்பாலான ஊராட்சிகளில் அடிப்படை வசதியும், மேம்பாடும் இல்லாத நிலையில்தான் உள்ளது இந்த நிலையில் ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில் தற்போது தேவி பூபாலன் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார்
இவர் நம்மிடம் மனம் திறந்தார்
முதலமைச்சரின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டும் 3,333 வீடுகள் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் மாவட்ட நிர்வாகத்தால் ஆற்காடு ஒன்றியத்திற்கு மட்டும் 452 வீடுகள் வழங்கியுள்ளனர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுதா நந்தியாலம் ஊராட்சியை தேர்வு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த விரும்புவதாக கூறி
ஜோனல் பிடிஓ செல்வம், ஓவர்சி வளர்மதி ஆகியோர் திட்ட இயக்குனரிடம் பேச என்னை கட்டாயப்படுத்தினர் திட்ட இயக்குனரை சந்தித்து பேசிய போது இந்த திட்டத்தை நந்தியாலம் ஊராட்சியில் துரிதமாக செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் மேலும் ஓவர் சி வளர்மதிக்கும் ரொம்ப கெடுபிடி பண்ணாம ஊராட்சி மன்ற தலைவரின் உதவியுடன் செயல்படுமாறு அறிவுரை கூறினார் இதன் அடிப்படையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து சுமார் 41பேருக்கும் மேற்பட்ட பயனாளிகளை தேர்வு செய்தனர்
இந்த நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பயனாளிகளான பலராமன் என்பவரின் இடத்தை இரு ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக இருக்கிறது டாக்குமெண்ட் சரியில்லை, சதீஷ் த/பெ தங்கராஜ் என்பவரின் சொந்த வீட்டை இடிக்கச் சொல்லி அஸ்தி பாரம் போட்ட பின்பு உங்கள் மனைவி அங்கன்வாடி அமைப்பாளராக வேலை செய்கிறார் அதனால் உங்களுக்கு வீடு கொடுக்க முடியாது, சரண்ராஜ் உங்கள் டாக்குமெண்ட் ஆன்லைனில் ஏறவில்லை, இந்திரா அசோகன் என்பவரை விசாரித்தோம்
நீங்கள் ஊருக்குள்ளே ஆளே இல்லை, ரவி கண்ணையன் வெளியூரில் குடியிருக்கிறீர்கள் மாங்குப்பத்தைச் சேர்ந்த கல்பனா சாம்பசிவம் வெளியூரில் குடியிருக்கிறீர்கள் வீடும் உள்ளது என்று பல்வேறு காரணங்களை சொல்லி நிராகரித்து விட்டார்
ஊருக்குள்ளே போகவும் முடியல பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல்லவும் தெரியல திமுக கட்சிக்கும் முதலமைச்சருக்கும் அவ பேரை உண்டாக்குகிறார்
மறைமுகமாக என்னையும் அவமானப்படுத்துகிறார் யாரோ? மர்ம நபரின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் ஓவர் சி ஓவராக ஆட்டம் போடுகிறார் இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்றார்
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒரு சிலரை சந்தித்து பேசினோம்
இந்திரா அசோகன் நம்மிடம் ஓவர் சி வளர்மதி சொல்லுகிறார் ஒரு மாதத்திற்கு முன்பு உங்களை விசாரித்தோம் நீங்கள் ஊருக்குள்ளே ஆளே இல்லை என்கிறார் பூர்விகமாக வாழ்ந்து வரும் எங்களைப் பார்த்து இப்படி சொல்லுகிறார் என்றனர்
சரண்ராஜ் பேசினார் 33 வருடமாக குடியிருந்து வருகிறோம் இடமும் இல்லை, வீடும் இல்லை தற்போது ஒரு இடத்தை வாங்கி இருக்கிறோம் ஊருக்குள்ள அரசு வீடு கட்டாத ஒரே ஆள் நாங்க தான் அதனை ஆய்வு செய்த பின்னரும் நிராகரித்திருக்கிறார் என்றார்
சதீஷ் தங்கராஜ் பேசுகையில் வீட்டை இடித்து அஸ்தி பாரம் போட சொல்லிய பிறகு உன் மனைவி அங்கன்வாடி டீச்சராக இருக்கிறாங்க வீடு தர முடியாது என்று சாதிய வன்மத்தோடு பேசுகிறார் வேண்டுமென்றே இப்படி செய்கிறார் என்றார்
இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு
ஓவர்சி வளர்மதியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது
யாரையும் நிராகரிக்கவில்லை ஏற்கனவே வீடு கட்டி குடியிருந்து வருகிறவர்களை தான் நிராகரித்துள்ளோம் நேரில் வாருங்கள் பேசலாம் என்று அலைபேசியை துண்டித்துக் கொண்டார்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பி டி ஓ வெங்கடேசனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது பயனாளிகளின் பட்டியலைக் கேட்டு வாங்கிக் கொண்டார் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
ஜோனல் பி டி ஓ செல்வத்திடம் தொடர்பு கொண்டு பேசிய போது யாருடைய வீடும் கேன்சல் ஆகவில்லை ஒர்க் ஆர்டர் வாங்கி தருவதாக சொல்லி தான் ஓவர்சி வளர்மதி வீடுகளை இடிக்கச் சொன்னார் நானும் உடனிருந்தேன் யாருடைய பேச்சும் கேட்கல, பணமும் வாங்கல, சாதியும் பாக்கல என்ன நிலவரம் என்பதை ஆபீசுக்கு சென்று ஃபைல் பார்த்து சொல்லுகிறேன் என்றவர் திரும்ப பேசவே இல்லை
திட்ட இயக்குனர் சுதாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது நான்கு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர் பயனாளிகள் குடிசை வீடு காண்பித்ததால் அதிகாரிகள் லிஸ்ட் தயார் செய்து இருக்கிறார்கள் வீடு கட்டும் போது தான் வித்தியாசம் தெரிந்திருக்கிறது ஏ பி ஓ வை ஆய்வு செய்து லிஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி இருக்கிறோம் லிஸ்ட் வந்த பிறகு பதில் சொல்லுகிறேன் என்று அலைபேசியை துண்டித்துக் கொண்டார்
முதலில் லிஸ்ட் எடுக்கிறார்கள், ஆய்வு செய்கிறார்கள், வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டு பார்வையிடுகிறார்கள், அதன் பிறகு அவர்களே காரணங்களைச் சொல்லி நிராகரிக்கிறார்கள் விசாரித்தால் முன்னுக்குப் பிறனாக பதில் சொல்கிறார்கள் அதிகாரிகள் பச்சோதிகளாய் மாறியது ஏன்? பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டிய அதிகாரிகள் கேட்பார் பேச்சை கேட்கலாமா? சாதிய வன்மத்தோடு நடந்து கொள்வது சரியா? ஜனநாயக மாண்பிற்கு எதிரான செயலாகும் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மனசாட்சியோடு பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது
அதிகாரிகளின் நடவடிக்கை என்னவாயிருக்கும்? பொருத்திருந்து பார்ப்போம்!
-சுள்ளி ஆனந்தன்
Leave a Reply