மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகளிடம் வாக்கு
வாதத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சியை சேர்ந்த 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கிரிவலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த மூன்று தினங்களாக ஆக்கிரமிப்பு கிரிவலப் பாதை மற்றும் சுற்றுப்பகுதிகளில் எடுத்து வந்த நிலையில், இன்று சன்னதி தெருவில் உள்ள திருப்பரங்குன்றம் நுழைவாயில் உள்ள கல்யாண விநாயகர் திருக்
கோவிலை அகற்ற மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இன்று காலை முற்பட்டனர்.
கல்யாண விநாயகர் கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் காவல்
துறையினரிடம் , இந்து முன்னணி பாஜக மற்றும் ஹனுமன் சேனா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிட
மும் , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை யினரிடமும், வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வெகுநேரம் காவல் துறையினர் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம்,
ஆக்கிரமிப்பு அகற்றுவதாக எடுத்துக் கூறியும் அங்கிருந்து செல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏழுக்கும் மேற்பட்ட
பாஜக, இந்து முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அதன் பின்னர், ஆக்கிரமிப்பில் உள்ள கல்யாண விநாயகர் திருக்
கோவிலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதையும் அகற்றினர்.
எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக திருப்
பரங்குன்றம் கோவில் நுழைவாயில் முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply