கரூர் மாவட்டத்தில் மாநகரில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவ்வப்போது காவல்துறையினர் இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் ரவுண்டானாவில் இருந்து தொழிற்பேட்டை செல்லக்கூடிய சாலையில அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகில் பசுபதிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, வெங்கமேடு என்.எஸ்.கே நகரை சேர்ந்த கௌதம் என்ற நரி கெளதம் (24) மற்றும் தமிழ் நகரை சேர்ந்த சஞ்சீத் (20) ஆகிய இருவரும் தமிழக அரசால் மருத்துவ காரணங்களுக்கு அல்லாமல் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காகவும், பயன்படுத்துவதற்காகவும் வைத்திருந்தது தெரியவந்து, இதுவரையும் பசுபதிபாளையம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், மாத்திரைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் போதை மருந்துகள் தடுப்புச் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இருவர் மீதும் ஏற்கனவே போதை மருந்துகள் தடுப்பு சட்டத்திற்கு எதிரான பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
– செல்வம்
Leave a Reply