தகாத வார்த்தையில் திட்டிய தனியார் பைனான்ஸ் ஊழியர் :மனமுடைந்த 7-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.
“உங்க அம்மா கட்ட வேண்டிய பணத்தை யாரடி கட்டுவா” என செல்போனில் மாணவியிடம் தகாத வார்த்தைகளில் பேசிய தனியார் பைனான்ஸ் ஊழியர்: மனமுடைந்த மாணவி லிஷாலினி )விஷம் குடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
650 ரூபாய் தவணை கட்ட ஒரு நாள் தாமதமானதற்கு சிறுமியிடம் செல்போனில் தகாத வார்த்தையில் திட்டிய தனியார் பைனான்ஸ் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை .
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்து வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியை சேந்த சத்யமூர்த்தி (35)அவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு சௌமியா, லிஷாலினி என்ற இரண்டு மகளும் குருசக்தி 9 என்ற ஒரு மகனும் உள்ளனர்.
பட்டணம் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சௌமியா 9ம் வகுப்பும் லிஷாலினி 7ம் வகுப்பும்,அவரது மகன் அருகில் உள்ள ஊராட்சி பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்திய மூர்த்தியும் அவரது மனைவியும் தனியார் பைனான்ஸில் ( ஜெயம் பவுண்டேஷன் ) 10,000 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளனர்.வாரம் 650 ரூபாய் வீதம் 20 வாரங்கள் தவணை கட்டவேண்டும்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூரில் தங்கி கட்டிடட வேலை செய்து வருகின்றனர். தனது குழந்தைகளை வாரம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு திரும்பி வேலைக்கு செல்லும் போது தனது மகள் லிஷாலினிடம் 650 ரூபாய் பணம் கொடுத்து பைனான்ஸ் ஊழியர் வந்தால் கொடுக்கும் படி கூறி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தனியார் மினி பைனான்ஸ் ஊழியர் வந்த போது லிஷாலினி பள்ளிக்கு சென்றதால் பணம் கட்ட முடியாமல் ஒரு நாள் தாமதம் ஆன நிலையில் பைனான்ஸ் ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த 7-ம் வகுப்பு மாணவி லிஷாலினி நேற்று மாலை 6.30 மணி அளவில் எலி மருந்தை குடித்துள்ளார்.
இரவு 9 மணி அளவில் லிஷாலினிக்கு வயிற்று எரிச்சல் அதிகமானதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் தான் எலி மருந்து சாப்பிட்டதையும் அதனால் வயிற்று எரிச்சல் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனே அவர்கள் லிஷாலினியை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் வேலைக்குச் சென்று இருந்த பெற்றோர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் என்ன நடந்தது என விசாரித்த நிலையில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் கட்ட வேண்டிய பணத்தை உரிய நேரத்தில் தொடர்ந்து சரியாக கட்டி வருகின்ற நிலையில் ஒருநாள் தாமதமானதற்கு 650 ரூபாய்க்காக 7-வது படிக்கும் தன்னுடைய மகளுக்கு செல்போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய தனியார் பைனான்ஸ் ஊழியர் மீதும் , சம்பந்தப்பட்ட மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– கௌரிசங்கர்
Leave a Reply