காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை சாலையை ஒட்டி உள்ள கோனேரி குப்பம் சர்வே எண் 119-ல் அமைந்துள்ள அரங்கநாதன் நகர் மற்றும் மாதர் நகர் இடையே பல நூறு ஏக்கர் பாசனத்திற்காக செல்லும் நீர்ப்பாசன கால்வாயை முழுமையாக ஆக்கிரமித்தும் பஞ்சாயத்திற்கு தானம் செய்யப்பட்ட தெருவையும் ஆக்கிரமித்தும் முறையான அனுமதி இன்றி பல ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட பங்களாக்கட்டும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பிரமுகர் சி.ராதாகிருஷ்ணன். ஆனால் விவகாரத்தை யாரும் கண்டு கொள்ளாமலும் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று பலர் அப்பகுதி மக்கள் ஒரு அச்சத்துடன் இருந்து வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கா. சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா
இவர்களின் ஆதரவோடு இதைப்போல் ஆக்கிரமிப்பு பணி நடக்கின்றதா என்று தெரியவில்லை இதைப்போல் நீர் பாசனத்திற்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த சி.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா திமுகவினரும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
– மணிகண்டன்
Leave a Reply