அலங்காநல்லூர்-திருக்குறளில், திருவள்ளுவர் படம்!அசத்திய அரசு பள்ளி மாணவி…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி. இவர் திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சுமார் 6 அடி உயரத்தில் நான்கு அடி அகலத்தில் 1330 திருக்குறளை, திருவள்ளுவர் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் மோகன் – ரேகா தம்பதியரின் மகள் காயத்ரி. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவி காயத்ரி தனது வீட்டு சுவற்றில் ஓவியம் வரைவதை பொழுது போக்காக கொண்டுள்ளார். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி 1330 திருக்குறளையும், திருவள்ளுவர் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்தப் படத்தை வரைய இரண்டு நாட்கள் ஆனதாகவும், தொடர்ந்து 6 மணி நேரம் வரை இதற்காக செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

– நா.ரவிசந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *