மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில், மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் – அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் – அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கலந்து
கொண்ட திமுக, அதிமுக கவுன்சிலர்களில் அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நிரந்தரமாக ஆணையாளர், பொறியாளர், கட்டிட ஆய்வாளர் இல்லாத நிலையால், பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,
திமுக கவுன்சிலர்கள் நகர் மன்ற தலைவராக உள்ள அதிமுக சேர்மன் சகுந்தலா உசிலம்பட்டி வளர்ச்சிக்கான திட்டங்களையும், நிதியையும் அரசிடமிருந்து பெற்று தராதததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே, கிடப்பில் போடப்பட்டுள்ள உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், தற்காலிக பேருந்து நிலையத்தில் பொது
மக்களுக்கு நிழற்கூடைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்
கைகளை முன்வைத்து
கார சார வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்
களை மதிப்பதில்லை என குற்றம் சாட்டி, இந்த நிலை தொடர்ந்தால், அனைத்து உறுப்
பினர்களும் ராஜினாமா செய்வோம் என, எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
– நா.ரவிசந்திரன்
Leave a Reply