பர்கூர் .ஊத்தங்கரை. வேப்பனப்ள்ளி.ஓசூர்.. தளி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணகிரி.
மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில்பெங்களூர் பிரதானசாலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் இந்திய ராணுவத்தில் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 8 ஆயிரம்பேருக்கு.உணவுப் பொருட்கள்.மின்சாதன பொருட்கள்.சோப்பு ஷாம்பூ.உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் இங்கு கொடுக்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் உயர்ரக மதுபான வகைகள் மாதத்திற்கு சிப்பாய்க்கு நான்கு பாட்டல்.அடுத்த ரேங்க் ராணுவ வீரருக்கு ஆறு பாட்டில்.கேப்டன் அந்தஸ்து உள்ளவர்களுக்கு பத்து பாட்டில்.மதுபானம் மாதந்தோறும் குறைந்த விலையில் மத்திய அரசு சார்பாக வழங்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் பணியில் உள்ள ராணுவ வீரர்கள் சுமார் 4ஆயிரம் பேர் குடும்பங்களுக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த அலுவலகத்தின் இணை இயக்குனராக கேப்டன் வேலு என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த ஆர்மி கேண்டினில் பொருட்கள் வழங்க 10-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்.மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் என பணிபுரிந்து வருகின்றனர்.
ராணுவ வீரர்களுக்கு மிக குறைவான விலையில் கொடுக்கப்படும் உயர்ரக மதுபான வகைகளை .உள்ளே பணிபுரியும் நபர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம்கேன்டீன் கார்டை .25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து அடமானமாக வாங்கிக் கொள்கின்றனர். வட்டிக்கு பதிலாக அந்த கேட்டின் கார்டில் வழங்கப்படும் மதுபானங்களை இவர்கள் வாங்கிக் கொள்கின்றனர்.
கேண்டின்கு வரும் உயரக மதுபான வகைகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் அடமானமாக வாங்கிய கேன்டின் கார்டில். சட்டவிரோதமாக.
பிளாக்டாக்.
100 பைபர்ஸ்.
டீச்சர்ஸ் .வாட் 69.
என எலைட்உயர்ரகமதுபான வகைகளை .வெளியில் விற்பனைக்கு தராமல் அடமான கார்டை பயன்படுத்து ந
எடுத்துச் சென்று விடுவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெளிமார்க்கெட்டில் மேற்கண்ட எலைட் வகை மதுபானங்கள் பல ஆயிரம் ரூபாய் விலை போவதால்.இந்த வகை மதுபானங்களை இவர்கள் சட்டவிரோதமாக எடுத்துச் சென்று விடுகின்றார்.இவ்வாறு எடுத்துச் சென்ற மதுபான வகைகளை குறிப்பிட்ட ஒரு ஐந்து நபர்கள் தங்கள் வீட்டையேஎலைட் பாராக மாற்றி காலை முதல் நல்லிரவு வரை 24-மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிக விலைக்கு உயர அக மதுபானங்களை பல வருடங்களாக பல லட்சக்கணக்கில் பணம் பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரே நபர் சுமார் 500 கேண்டின் அடமான கார்டை வைத்துள்ளதாகவும் அவர் மட்டும் சராசரியாக ஒரு கார்டுக்கு ஐந்து பாட்டில் என எடுத்துக் கொண்டால்2500 பாட்டில் உயரக மதுபானங்களை கடத்திச் சென்று விற்பனை செய்கிறார் என்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் 100 முதல் 300 அடமான கேண்டீன் கார்டுகளை வைத்துள்ள நபர்கள் இவ்வாறு செய்கின்றனர் எனக் கூறுகின்றனர் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்.
இது மட்டுமல்லாமல்முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் கேண்டினில் பொருட்களை வாங்க வரும் போது உள்ளேயே நாள் ஒன்றுக்கு200 பாட்டிலுக்கு மேல் உள்ளேபணிபுரியும் நபர்கள் வாங்கி விடுவதாக கூறுகின்றனர்.
இந்த முறைகேடு பல வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒழுக்கத்திற்கும்.நேர்மைக்கும் பேர் போன இந்திய ராணுவத்தில்
தங்கள் இன்னுயிரை துச்சமாக மதித்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் பணியில் உள்ள குடும்பத்தினருக்கும் வழங்குவதற்காக மத்திய அரசு கொடுக்கும் மதுபான வகைகளை மாதம் ஒன்றுக்கு பல்லாயிரம் பாட்டில்கள் சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்யும் கேண்டினில் பணிபுரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் சரேவு அவர்கள்என கேட்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்.
-ஜெயசேனை
Leave a Reply