சாலையில் நாங்கள் பார்வையிட வந்த பகுதி மட்டுமே மின்விளக்குகள் எரிகிறது. சாலையின் மறுபுறம் ஏன் விளக்குகள் எரியவில்லை உடனடியாக இருபுறமும் மின்விளக்குகள் எரியும் வண்ணம் அமைக்குமாறு பரவை பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
நீதிபதிகள் வருகையால், பல இடங்களில் மின்சார விளக்குகள் எரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.
இந்த தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின்விளக்குகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பரவை சமயநல்லூர் பகுதிகளில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் விபத்துக்கள் நடைபெறும் இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சமயநல்லுார் பகுதியில் விபத்துக்களை தடுக்க தாக்கலான வழக்கில் நெடுஞ்
சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பரவை பகுதியை சேர்ந்த செந்தில்குமார், என்பவர்,
மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்
சாலை சமயநல்லுார் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் விபத்துக்
களை தடுக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்
சாலைத்
துறை, மதுரை எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும், என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன் நீதிபதிகள் எம்.ஏஸ்.
ரமேஷ் , மரிய கிளட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்
துறை தரப்பில் , கடந்த 2018 முதல் 2024 அக்டோபர் வரை பரவை சோதனைச் சாவடியிலிருந்து சமயநல்லுார் நான்கு வழிச்சாலை பகுதிவரை 143 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 33 பேர் இறந்துள்ளனர்.
இதனால், மதுரை – திண்டுக்கல் நெடுஞ்
சாலையில், பாத்திமா கல்லுாரி- சமயநல்லுார் இடையே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியதை காட்டுகிறது.
மதுரை நெடுஞ்
சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம், பராமரிப்பு-2) ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டு இருந்தார்.
அதைத்
தொடர்ந்து, மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்
சாலை பரவை சமயநல்லூர் பகுதிகளில் அதிகம் விபத்து நடக்கும் இடங்களை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், ஆய்வின்
போது நீதிபதிகள் சாலையின்
ஒரு புறத்தில் மட்டுமே மின்விளக்குகள் உள்ளது. மறு
புறத்தில் ஏன் மின்விளக்குகள் இல்லை என, கேள்வி எழுப்பினர். அதற்கு பேரூராட்சி அதிகாரிகள் அந்தப் பக்கம் மின்கம்பம் இல்லை. அதனால் மின்
விளக்குகள் எரியவில்லை என கூறினார்கள்.
அதற்கு நீதிபதிகள் உடனடியாக மின்கம்பம் அமைத்து மின்விளக்குகள் அமைத்து இருபுறமும் வெளிச்சம் இருக்குமாறு அமைக்க வேண்டும் என, உத்தரவிட்டார் .
பரவை பகுதியில் , தனியார் உணவகத்தில் வேலை பார்க்கும்
பெண் கூறுகையில்,
நான் பத்து ஆண்டுகளாக இந்த சாலையை கடந்து செல்கிறேன் பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் மின்சார விளக்கு வேண்டுமென்று தெரிவித்தேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருகிறார்கள் என்றவுடன் சாலை முழுவதும் மின்
விளக்கு அமைக்
கப்பட்டுள்ளது.
இந்த சாலையை
நான் இப்படி பார்த்ததே இல்லை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு
மிக்க நன்றி என கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். சாலையில் இப்படி மின்விளக்கு தினசரி பயன்பாட்டில் இருந்தால் பயம் இல்லாமல் நடக்கலாம் என, கூறினார் .
ஆனால், சாலையில் அமைக்
கப்பட்ட மின்
விளக்குகள் அந்தப் பகுதியில் தற்காலிகமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட வருகிறார்கள் என்பதற்காக இரும்பு கம்பிகளை அமைத்து நீதிபதி வரும் ஒருபுறம் மட்டும்
போக்கஸ் லைட்டுகள் கட்டப்
பட்டிருந்தது .
இந்தப் பகுதியில், தனியார் கல்லூரி
மற்றும் முக்கிய வணிக வளாகமான பரவை காய்கறி மார்க்கெட் உள்ளது.
இந்த மின்சார விளக்குகளை நிரந்தரமாக அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர் .
பரவை பகுதியில் ,
பல ஆண்டுகளாக மதுரை திண்டுக்கல் தேசியநெடு சாலையில் மின்விளக்கு இன்றி அவதிப்
பட்டதாக, பொதுமக்கள் தெரிவித்த நிலையில், இன்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இந்தப் பகுதியில் பார்வையிட வருகிறார்கள் என்றவுடன், பரவை பேரூராட்சி நிர்வாகம் சாலையில் ஆங்கங்கே மின்
விளக்குகள் அமைக்கப்பட்டது. அவர்கள் சென்றவுடன் மின்விளக்கு பராமரிக்காமல் விட்டு விடாமல் நிரந்தரமாக பராமரிக்க வேண்டும்.
மேலும், சாலையின் இருபுறமும் மின்
விளக்குகள் எரியும் வண்ணம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply