மதுரை-மீண்டும் “அண்ணாமலை”.பாஜகவினர் உற்சாக போஸ்டர்!

பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை நியமனம் செய்து பாஜக தலைமை குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜக தேசிய தலைவர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில்,
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி ஆனது தேசிய தலைமையால் ஆலோசனை செய்யப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில்,
மதுரை பாஜக நிர்வாகிகள் சிலர் (அண்ணாமலையின் ஆதரவாளர்கள்) பிரேக்கிங் நியூஸ் “பாஜக தொண்டர்கள் உற்சாகம் பொதுமக்கள் வரவேற்பு”. என்றும் *மீண்டும் தமிழக பாஜக தலைவராக ரி.அண்ணாமலை  நியமிக்கப்பட்டுள்ளார். வழி முழுவதும் தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு என்று மதுரை மாநகர் முழுவதும் பாஜக நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர் பாஜக நிர்வாகிகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளராக இருக்கக்கூடிய செந்தில்குமார் மற்றும் விஷ்ணு பிரசன்னா ஆகிய இருவரும் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்
மற்ற பாஜக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

– நா.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *