ராசிபுரம்- காவல் துறையை கண்டித்து… நள்ளிரவில் கிராமமக்கள் மறியல்

ராசிபுரம்-
காவல் துறையை கண்டித்து…
நள்ளிரவில் கிராமமக்கள் மறியல்…

ராசிபுரம் காவல் துறையை கண்டித்து நள்ளிரவில் இரும்பு கம்பிகள், கற்களை போட்டு  சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்கள்… அதிரடிப்படை குவிப்பு …

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் நேற்று  புகார் கொடுத்தும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மது போதையில்  வீடு புகுந்து காசாம்பு, மண்கண்டன், தம்பதியினர் , மகள் தனுஸ்க்கா, மாமனார் சோளமுத்து-வை ” நீ யாருடி எங்கள கேக்க அப்படி தாண்டி போவோம் என மிரட்டி” பயங்கர ஆயுதங்களுடன்  தாக்கிய 30-க்கு மேற்பட்ட நபர்களை இதுவரை கைது செய்யாததை கண்டித்து நள்ளிரவில் கிராமத்து மக்கள் சாலை மறியல் செய்ததால் பதற்றம்..

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று 30 -க்கு மேற்பட்ட இளைஞர்கள்  மது போதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை சாலையில்  இயக்கியதை அதே பகுதியைச் சேர்ந்த சாலையோரம் குடும்பத்துடன் வசிக்கும் காசாம்பு என்ற பெண்  தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது/

மது போதையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட  இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பெண் காசாம்பு அவருடைய மாமனாரை சோனமுத்து- வை கொடூரமாக தாக்கியதில் பயங்கர காயத்துடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 மெதுவாக செல்ல அறிவுறுத்திய  பெண்ணின் குடும்பத்தை கொடூரமாக தாக்கிய 30க்கு மேற்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராசிபுரம் காவல்துறையினிடம் நேற்று ஊர் மக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காமல் , குற்றம் புரிந்தவர்களை அழைத்து கண்டிக்காமல், இராசிபுரம் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் எப்படி எங்கள் மீது புகார் கொடுக்கலாம் என அதே கும்பல் இன்று இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் முன் பயங்கர ஆயுதங்களுடன், தகாத வார்த்தைகளால் பேசி சம்பந்தப்பட்ட குடும்பத்தை  தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது .

இதைப் பார்த்த ஊர் மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் , அங்கு ஒரு சில காவல்துறையினர் மட்டுமே வந்துள்ளனர் .

எங்கள் ஊயிருக்கு பாதுகாப்பு கேட்டு நேற்று  நாங்கள் புகார் கொடுத்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் இன்று எங்களை கொலை செய்ய 40-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்த நிலையில் ஊர் மக்களே எங்களை காப்பாற்றினார்கள்,என காவல்துறைக்கும் போலீஸாருக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றிதால் , 200க்கும் மேற்பட்ட  ஊர் மக்கள் சாலைகளின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் .

 சாலை மறியலில் ஈடுபட்டவர்களை  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயற்சி செய்தும் எந்தப் பயனும் இல்லாத நிலையில், போராட்டக்காரர்களை கலைப்பதற்கு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது .

 மேலும் இந்த பதட்டமான சூழ்நிலையில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார்,  துணை ஆய்வாளர் சுரேஷ் , உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்களிடம் காவல் ஞிஷிறி இப்போது நீங்கள் கலைந்து  செல்லவில்லை என்றால் , உங்களை வீடியோ எடுத்து உங்கள் மீதும் வழக்கு போடுவேன் என மிரட்டும் தோணியில் பேசினார் . எதற்குமே  ஒத்துக்கொள்ளாத மக்கள் ஞிஷிறி-யை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வேறு வழியில்லாமல் காலை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என உத்தரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர் .

இரு வேறு பிரிவினர் இடையே  பதற்றமான சூழல் நிலவுவதால் அதிரடிப்படை மற்றும் ராசிபுரம் காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-சங்கர்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *