அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ளே புதிதாக வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அம்பேத்கர் பேருந்து நிலையம் என, ஏற்கனவே பெயர் உள்ள நிலையில், பேருந்து நிலையத்திற்குள் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மதுரை மாவட்ட அமைப்பாளர் அதி
வீரபாண்டியன் ஒன்றியச் செயலாளர் தமிழ் நிலவன் மாவட்ட அமைப்பாளர் வடகல் தமிழன் துணை அமைப்
பாளர்கள் பரமசிவம் முத்துகிருஷ்ணன் ஒன்றிய அமைப்பாளர்கள் வாசு தமிழ் குமரன் நிர்வாகிகள் முருகானந்தம் செஞ்சுடர் குறிஞ்சி செல்வன்
உள்பட பலர் கலந்து கொண்டனர் .
மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன் கூறுகையில், அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு ஏற்கனவே உள்ள அம்பேத்கர் பெயரை மாற்றக்
கூடாது.
மேலும், அங்கு புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கும் அம்பேத்கர் பெயரே வைக்க வேண்டும் கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதை கண்டித்து தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம். அலங்காநல்லூர் பேரூராட்சி வணிக வளாகத்திற்கு பெயர் மாற்றும் நடவடிக்கையை
பேரூராட்சி நிர்வாகம் கைவிடவில்லை எனில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அழைத்து வந்து அலங்கா
நல்லூர் பேருந்து நிலையம் முன்பு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என, தெரிவித்தார்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply