நாமக்கல்-
ஜல்லிக்கட்டு போட்டியில் பாகுபாடு…
விழாக்குழுவினர் மீது குற்றச்சாட்டு…
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்காக மாடுபிடி வீரர்கள் மற்றும் போட்டியில் விடப்படும் மாடுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
இதனிடையே பொட்டிரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு தரப்பினருக்கு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் அனுமதிச்சீட்டை வழங்காமல் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுத் தரக்கோரி மனு அளிப்பதற்காக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். மேலும் முறையாக அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தாங்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் இல்லையெனில் போட்டியை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்கின்றனர்.
-சங்கர்ஜி