Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி-10 மாதமாக சும்மா இருந்துவிட்டு,ரத்து செய்தபின் மேலூருக்கு வருவது நாடகம்…-மாஜி செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 100க்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், பார்வட் ப்ளாக் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரை டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது எல்லோருடைய பாராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே,
திமுக அந்த உரிமம் தங்களுக்கு வேண்டும் என்று 10 மாத காலமாக சும்மா இருந்துவிட்டு, தங்களுக்கு வேண்டும் என்று தான் கேட்டார்களே தவிர இந்த கனிம சுரங்கம் வேண்டாம் என சொல்லவில்லை. சம்மந்தப்பட்ட அமைச்சரும் சொல்லவில்லை, முதலமைச்சரும் சொல்லவில்லை எனவும்,
இன்றைக்கு மேலூர் மக்கள் போராட்டம் நடத்திய பின் தான் முதல்வர் நான் இருக்கும் வரைக்கும்  என துள்ளுகிறார்.
சட்டசபையில் 2 மணி நேரம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாதாடினார் ஏன் என்று., அதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்லவில்லை.
இத்திட்டம் ரத்து செய்யப்பட்ட சூழலில் நாளை விவசாயிகளை முதல்வர் சந்திக்க உள்ளது குறித்த கேள்விக்கு,
இதெல்லாம் நாடகம் தான், எல்லாமே நாடகம் தான்.
அவர் முதல்வரானால் என்னை நேரடியாக வந்து பார்க்கலாம் என்றார்., யார் போய் பார்த்தார்கள் யார் போய் பார்க்க முடியும்., யாராவது ஒருவர் பார்த்து மனு கொடுக்க முடியுமா, யாராவது பார்த்திருக்கிறார்களா.,
4 ஆண்டுகளில் சும்மா செல்கிறார்கள் இத்தனை ஆயிரம் கோப்புகள் வந்தது, இத்தனை லட்சம் கோப்புகள் என சொல்லலாமே ஒழிய அதெல்லாம் இல்லை. அப்படி எதற்காவது தீர்வு கண்டிருந்தால் சொல்லிருப்பாங்களே, இந்த இந்த தீர்வுகள் இந்த ஊருக்கு கிடைத்திருக்கு என, சொல்லிருப்பாங்க., அதெல்லாம் சும்மா சொல்றாங்க என பேசினார்

– நா.ரவிச்சந்திரன்