Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை.- நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு. கையெழுத்து இயக்கம்… உண்ணாவிரத போராட்டம்

மதுரை.-
நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு.
கையெழுத்து இயக்கம்… உண்ணாவிரத போராட்டம்…

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நரசிங்கம் சாலை முன்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் மாநகராட்சியோடு பல்வேறு ஊர்கள் இணைக்கப்படும் என்று சமீபத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால்,
பல்வேறு ஊர்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் மக்கள் ஆதரவு தந்த வண்ணம் உள்ளனர். சில இடங்களில் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை ஒத்தக்கடை அடுத்து உள்ள யா.நரசிங்கம், ஒத்தக்கடை கொடிக்குளம் உள்ளிட்ட கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட யா.நரசிங்கம் கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத்
தொடர்ந்து,
கிராம பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், நரசிங்கம் சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இட்டனர்.
மாநகராட்சி உடன் இணைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
இது குறித்து போராட்டத்தில்
ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளதாவது:-
எங்கள் பகுதிகளை மாநகராட்சி உடன் இணைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் அன்றாட கூலித் தொழில் செய்பவர்கள் , விவசாயத்தை நம்பியே வாழ்கிறோம்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும்
மாநகராட்சியில் எங்களுடைய பகுதிகள் இணைக்கப்பட்டால் வரி உயர்வு , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பாதிப்பு , விவசாய நிலம் பாதிப்பு போன்றவை நடைபெறும் ஆகையால் எங்களுக்கு மாநகராட்சி உடன் இணைய எங்களுக்கு விருப்பமில்லை, எனவே, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றோம். நாங்கள் கிராமமாகவே இருந்து கொள்கிறோம் என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், யானைமலை நரசிங்கம் கிராம பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து
 கொண்டனர்.

-நா.இரவிச்சந்திரன்