Save 20% off! Join our newsletter and get 20% off right away!

திருமங்கலம்-சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்…ரூபாய் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விசாரணை…

மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில்
 பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும்,
ரூபாய் 70,000 பணம் வங்கிக் கணக்கு மூலம் வாங்கப்பட்டது தெரியவந்தது.
திருமங்கலம் அருகே, கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவருக்கு சொந்தமான 3ஏக்கர் 18 சென்ட் இடத்தை செந்தில்குமார் கிரையம் செய்வதாக திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார்.
ஜனவரி 24ஆம் தேதி பத்திரப்பதிவு செய்வதற்கு வந்துள்ளார் .
அப்போது, முந்தைய நிலத்தின் உரிமையாளர் ஆனந்தராஜ் பத்திரம் காணவில்லை என, தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய ஆய்வாளிடம் சான்று வாங்கியது உண்மைதானா என விசாரித்தது பின்பு, பதிவு செய்வதாக சார்பதிவாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14-ஆம் தேதி உண்மைத்தன்மை அறிந்து விசாரணை முடித்துள்ளார் .
பின்னர், செந்தில்குமார் 21ஆம் தேதி பத்திரம் செய்ய வந்துள்ளார். அவரிடம் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் திரும்பவும் கேட்டுள்ளார்.
பின்னர் ,பேரம் பேசி ரூபாய் 70 ஆயிரம் தருவதாக ஒப்புக்
கொண்டார். இந்நிலையில், இன்று செந்தில்குமார் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அவரிடம் புரோக்கர் ,பால மணிகண்டனிடம் ரூபாய் 70,000 வங்கி கணக்கு மூலம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் செந்தில்குமார் பெயருக்கு பத்திரப்பதிவு  முடிந்து விட்டது.
 இது தொடர்பாக ,
லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமணிகண்டனை பிடித்து விசாரணை செய்த போது,
சார் பதிவாளர் பாண்டியராஜன் கேட்டதால்தான் வாங்கி உள்ளதாக வாக்குமூலம் மூலம் அளித்ததின் அடிப்படையில்,
லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டியராஜன் மற்றும் பால மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

– நா.ரவிச்சந்திரன்