Save 20% off! Join our newsletter and get 20% off right away!

திண்டுக்கல்-சட்டவிரோத மணல் குவாரிகள்…கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

திண்டுக்கல்லை  சேர்ந்த ஜெயபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திண்டுக்கல், வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். அதில் ரசாயனம் கலப்பதால் ‘எம்’ ‘சாண்ட்’ போல் தோற்றமளிக்கிறது. சிலர் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஆலைகள் நடத்துகின்றனர்.
மணல் கலவையை தண்ணீரில் கழுவி, ரசாயனம் கலந்த கழிவுநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் கலக்க விடுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆலைகளை, கனிமவளத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறலுக்கு அபராதம் விதித்து ஆலை, குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டார்.
 நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தமிழக கனிமவளத் துறை முதன்மைச் செயலர், திண்டுக்கல் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

– நா.ரவிச்சந்திரன்