மதுரை-
தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை …
பாஜக மீது செல்வப் பெருந்தகை கோபம்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார்.
நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து ஆச்சரியங்களும் வேறுபாடுகளும் இருந்தாலும்,
தமிழக முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை தொகுதி மறு சீரமைப்பு அல்லது மறு வரைவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக நலனை பாதுகாக்க வேண்டும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்து பேசி இருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். முதல்வரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. எங்களுக்கான 7.2 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைய கூடாது.
நாடாளுமன்றத்தில்
சட்ட திருத்தம் நடைபெற வேண்டுமென்றால் 24 மணி நேரத்திற்கு முன் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்பது நடைமுறை.
ஆனால், புதிய வேளாண்மை திருத்தச் சட்டத்திற்கும் காஷ்மீர் மீது உள்ள 370 சட்ட திருத்தத்தை அகற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு.
அதுபோல் இந்த தொகுதி மறுசீராய்வு நடவடிக்கையும் வந்து விடக்கூடாது.
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு கொண்டு
வரப்பட்ட திட்டம், ராக்கெட் ஏவு தளம் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இன்று வரை தொடங்கவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை பாஜக தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.
நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் மீது அக்கறை கொண்ட அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டனர். ஆனால்,
பாஜக ஏன் கலந்து கொள்ளவில்லை.
தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பதை இது காண்பிக்கிறது.
தொடர்ந்து,
தாட்கோ மூலமாக தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அறிவிக்கப்பட்ட 4800 கோடி நிதி வழங்கப்
படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருவதாக குறித்த கேள்விக்கு:
இது தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடசொல்லுங்கள் ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு சென்ற நிலையில் கடன் வாங்கினாலும் தனது சிறப்பான நடவடிக்கையால் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் இந்த நிதி வந்தால் அது நிச்சயம் பயன்படுத்தத்தான் போகிறோம் என்றார்.
இதனை அடுத்து, காங்கிரஸ் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி மாணிக் தாகூருக்கும் உங்களுக்கும் கட்சிக்குள் பனி போர் நடைபெறுவதாக
தகவல் வருவது குறித்த கேள்விக்கு:
எனக்கும்,
சகோதரர் மாணிக் தாகூருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.தற்போது பனிப்போர் இல்லை வெயில் தான் அடிக்கிறது.எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை அவர் எங்களுடைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்னைவிட 10 வயசு சிறியவர் என்றாலும் நான் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அவர் என் மீது மரியாதை வைத்திருக்கிறார் ஒரு பிரச்சனையும் இல்லை உங்களைப் போல் யாராவது பிரச்சனை செய்யாமல்
இருந்தால் சரி.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை முகாமிட்டு தங்கள் மீது புகார் அளித்த செய்தி ?
ஒன்னும் முகாமிடவில்லை,ராணுவம் தான் முகாமிட்டு
இருக்கிறது நாட்டை பாதுகாப்பதற்காக ஒரே நாடு ஒரே கட்சி ஜனநாயகத்திற்கு உட்பட்டு இருக்கிறோம்.அதுபோல் ஒன்றும் இல்லை .மாணிக் தாகூர் எக்ஸ்த்தள பதிவு போட்டது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என, செல்வ பெருந்தகை கூறி சென்றார்.
– நா.ரவிச்சந்திரன்