Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இராசிபுரம்- தொடரும் திருட்டு… ரோந்து பணியில் அலட்சியம்?

இராசிபுரம்-
தொடரும் திருட்டு…
ரோந்து பணியில் அலட்சியம்?
பொதுமக்கள் அச்சம்…

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி கார்டன் பகுதியில் அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் நடந்த  கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

 இப்பகுதியில்.300-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருப்பு வாசிகள் வசித்து வரும் நிலையில் , தொடர்ந்து குறி வைத்து இப்பகுதிகளில்  தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது  நடைபெற்ற திருட்டு மூன்றாவது முறையாக அதே வீட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது .(திருடனுக்கு ராசியான வீடு போல… ஒவ்வொரு முறையும் திருட்டு தொழிலை தொடங்கும் முன் இந்த வீட்டுக்கு வந்து கதவை உடைத்து திருடினால் தான் திருட்டு தொழில் நன்றாக நடக்கும் போல)

 ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்(45) என்பவர் குழந்தைகள் படிப்பிற்காக இங்கு வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளார் . இவருடைய மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் .

 இவர் வீட்டின் அருகே வசிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் அனுராதா தம்பதியினர் இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர் .

 இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் விடியற்காலை சுமார் 3 மணியளவில் செந்தில் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  மூன்று பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு, அருகே இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த  அணில் குமார் வீட்டின் ஜன்னல்களைத் திறந்து  நான்கு பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் சிசிடிவி வைக்கப்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

 மேலும் அருகே வசிக்கும் வீடுகளில் தொடர் விசாரணை மேற்கொண்ட போது சம்பந்தப்ட்ட வீட்டில் 3 வது முறையாக கதவு உடைக்கப்ட்டு திருட்டு சம்பவம் நடைபெருகிறது எனவும், இரவு ரோந்துபணிக்கு நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு முறையாக ரோந்து பணிக்கு வராததால் தொடர்ந்து இது போல் கொள்ளை சம்பவம் நடைபெருவதாக கூறினர்.

 நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் ஒவ்வொரு பகுதியிலும் இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு  தொடர் ரோந்து பணி செய்ய அறிவுறுத்தப்படும் நிலையில் , இரவு ரோந்து பணியில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது துறைரீதியான  நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ராசிபுரம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டுக்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

-சங்கர்ஜி