Save 20% off! Join our newsletter and get 20% off right away!

வலிகள் சோதனைகளை கடந்து, அதிமுக ஜெயிக்கும்! – ஆர்.பி.உதயக்குமார்

வலிகள் சோதனைகளை கடந்து,
அதிமுக ஜெயிக்கும்!
– ஆர்.பி.உதயக்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி, கன்னியம்பட்டி, பொட்டுலுபட்டி பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி கழக உறுப்பினர்களின் ஆலோசனைக்
 கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பொட்டுலுப்பட்டியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
தாய்மார்கள் எப்படி பல்வேறு வலிகளை தாங்கி கடந்து செல்கிறார்களோ, அதே போல தான் அதிமுக புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர் காலத்திலும் சோதனைகளை சந்தித்திருக்கிறது, புரட்சி தலைவி அம்மா ( ஜெயலலிதா ) காலத்திலும் சோதனைகளை சந்தித்திருக்கிறது, இன்று எடப்பாடியார் காலத்திலும் சோதனையை சந்திக்கிறது என்பதை இந்த உசிலம்பட்டி மண்ணிலிருந்து சொல்வதில் கடமை பட்டுள்ளேன்.
ஆனால்,
இந்த சோதனைகளை கண்டு கலங்கி நிற்கும் தலைவர்கள் இல்லை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் தமிழ்நாட்டிற்கு கலங்கரை விளக்கமாக தான் மக்கள் பணியாற்றி இருக்கிறார்கள், சோதனை வந்தால் முடங்கி போகிற கட்சி, முடங்கி போகிற தலைவர்கள் அல்ல.,
காக்கி சட்டை போட்டுள்ள காவல்துறையை யாரும் மதிப்பது இல்லை வாட்ச்மேன் மாதிரி பார்க்கிறார்கள், ஏனென்றால் அந்த அளவுக்கு செயல் இழந்து போய்விட்டார்கள்.
ஆனால், முதல்வருக்கு என்ன கவலை என்றால் அதிகாரம் அவர் கையில் தான் இருக்கிறது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமா வேண்டாமா, அவர் என்ன சொல்கிறார் ஒரு அப்பாவா சொல்கிறேன் யாரும் போதை பொருள் பயன்படுத்தாதீங்க என அதிகாரம் உங்கள் கையில் இருக்கு நேர்மையான அதிகாரிகளை காவல்
துறையில் நியமித்து நடவடிக்கை எடுக்க சொன்னால் எடுக்க போகிறார்கள்.
அதை விட்டுட்டு, அப்பாவா சொல்கிறேன், தம்பி சொல்கிறேன், அண்ணனா சொல்கிறேன் இதெல்லாம் யாரை ஏமாற்ற , உங்களது கையில் அதிகாரம் இருக்கு கோப்பில் கையெழுத்து போட்டால் சரியாகிவிடும்.
அவருக்கு இப்போ கவலை எல்லோரும் அப்பா என கூப்பிடனும்னு, மாமானு கூப்பிடலாம் தப்பில்லை, தத்தா கூப்பிட்டா தப்பில்லை, பெரியப்பானு கூப்பிட்டா தப்பில்லை, சித்தப்பானு கூட கூப்பிட்டா தப்பில்லை, அப்பானு கூப்பிட்டா தப்பா வருமா வராதா பெத்தவரை வீட்டில் வைத்துக் கொண்டு எங்கோ இருக்கிறவரை எப்படி அப்பா என்று சொல்ல முடியும், யார் எழுதி கொடுத்தாலும் எதையாவது வாசிக்கிறார்.
இந்த மக்கள் மீது அக்கரை இல்லை இதை தான் திண்ணை பிரச்சாரமாக செய்கிறார்., இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிற பிரம்மாஷ்திரம் தான் இந்த துண்டு பிரசுரம் இதை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என, பேசினார்.

-நா.ரவிச்சந்திரன்