தேனி மாவட்டம் அல்லிநகர பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமுருகன் மகள் வீரலட்சுமி,
இவர் கூலித் தொழிலாள மகள் அன்னை டோரா செவிலியர் கல்லூரியில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை செவிலியர் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து முடித்த பின்னர் நான்காம் ஆண்டு படிக்கும்போது போதிய பண வசதி இல்லாததால் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டார்.
தற்பொழுது வீட்டில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீரலட்சுமி ஏதாவது வேலைக்கு சென்று தன்னுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி வருகிறார்.
வேலைக்கு செல்லும் இடங்களில் அசல் சான்றிதழ் கேட்கின்றனர்.
அப்போது தான் படித்த அன்னை டோரா செவிலியர் கல்லூரியில் வாங்க பலமுறை சென்று முயற்சி மேற்கொண்டார்.
அசல் சான்றிதழ் வேண்டுமென்றால் 80 ஆயிரம் பணத்தை கட்டினால் மட்டுமே அசல் சான்றிதழ் வழங்கப்படும் என தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வீரலட்சுமி அலக்கழிப்பு செய்து வருகிறது.
கல்லூரி நிர்வாகம் நீ கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டதால் வேறு மாணவிக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு நழுவி விட்டது எனவே நீ பணம் முழுவதையும் கட்ட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் நிர்பந்தம் செய்வது வருகிறது.
காசு இல்லாமல் கல்லூரி படிப்பை நிறுத்திய மாணவியிடம் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பணம் கேட்டு நிர்பந்தம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு வீரலட்சுமி அசல் சான்றிதழ் பெறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என வீரலட்சுமி எதிர்பார்க்கிறார்.
-ஜெயபால்