ஜோலார்பேட்டை
தொகுதி மக்களுக்கு..,
தொந்தரவில்லாத தேவராஜ் எம்எல்ஏ!அமைச்சரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் ஜெயிச்சா அமைச்சர் பதவி நிச்சயம் என்று சட்டமன்ற தேர்தலின்போது பெரும்பான்மையான திமுகவினர் அழுத்தம் கொடுத்து பேசினர். அவர்களில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வாணியம்பாடி செக்குமேடு பகுதியை சேர்ந்த தேவராஜியும் ஒருவர் இவர் எதிர்த்து போட்டியிட்டது பத்து வருடங்களாக தொடர்ந்து அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியை எதிர்த்து, வன்னியர் வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஜோலார்பேட்டையில் மோதிக்கொண்ட இருவரும் வன்னியர் சமுதாயத்தினரே!
செக்குமேடு தேவராஜிக்கு வாணியம்பாடி தொகுதி மீது தீராத காதல்! தொகுதி நமக்குத்தான் என்கிற திடமான நம்பிக்கையில் ரொம்ப காலமா தேர்தல் பணி செய்துகொண்டிருந்தார். அறிவாலயம் தேவராஜை ஜோலார்பேட்டைக்கு அனுப்பி வைத்தது.
தேவராஜியின் பழைய அடையாளம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதனால்தானோ என்னவோ தேவராஜி ஜோலார்பேட்டையில் ஜெயிக்கக் கூடாது என்பதற்கு நிறைய அடிப்படை வேலைகள் பார்த்தார் என்று பேச்சை ஆரம்பிக்கின்றனர் ஜோலார்பேட்டை திமுகவினர்.
தேர்தலில் கே.சி.வீரமணி வீழ்ந்தார் தேவராஜ் வென்றார் அமைச்சரை வீழ்த்தினார் அதனால நிச்சயமாய் அமைச்சராவார் என்று திமுகவினர் மத்தியில் பலமான பேச்சு கிளம்பியது அமைச்சர் பதவிக்கு நிறைய படிச்சிருக்கனும் அதனால தேவராஜிக்கு வாய்ப்பில்லை என்று வாதங்கள் வலம் வர ஆரம்பித்தது. வாணியம்பாடி இடைத்தேர்தல்ல அதிமுக தரப்பில் ஜெயிச்ச சம்பந்திகுப்பம் வடிவேலு ஐஏஎஸ் முடிச்சிருந்தாரா? அவர் அமைச்சர் ஆகலையா… தலைமை முடிவு பண்ணா யாரும் தடுக்கமுடியாது என்றபடி உடன்பிறப்புகள் மத்தியில் உரையாடல்கள் நடந்துகொண்டிருக்க, திருவண்ணாமலையை சேர்ந்த எ.வ.வேலு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரானார். அவ்வளவுதான் எ.வ.வேலு சிஷ்யனாக ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டார். தேவராஜ் அப்படியே துரைமுருகன் கம்பெனிக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, மாவட்ட செயலாளராக திருப்பத்தூர் மாவட்டத்தையும் சட்டமன்ற உறுப்பினராக ஜோலார்பேட்டையையும் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவையும் சுற்றிவர ஆரம்பித்தார்.
ஆளைப்பார்த்தா முரட்டு ஆசாமி போல தெரிந்தாலும் தேவராஜ் வெள்ளந்தியான மனுஷன், திருப்பத்தூர் மாவட்ட திமுகவினர் ஒரு சிலர் தேவராஜியின் மாவட்ட செயலாளர் பதவியை குறிவைக்க, ஜோலார்பேட்டை திமுகவினர் சிலர் வாணியம்பாடிகாரர் ஜோலார்பேட்டையில் எம்எல்ஏவா? இருதரப்பிலும் கலக அரசியலை கச்சிதமாக செய்ய ஆரம்பித்தனர் தேவராஜ் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். நாட்றம்பள்ளியில சட்டமன்ற உறுப்பின்ர அலுவலகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிங்காரவேலன் அலுவலக பொறுப்பாளர், தொகுதி மக்களின் வருகை கோரிக்கை மனுக்களை பதிவு செய்துகொள்வார் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அலுவலகம் வரும் தேவராஜ், கோரிக்கை மனுக்களை உரிய அதிகாரிகளிடம் அனுப்பி செய்யச்சொல்வார். தொகுதியில நடக்கிற நல்லது கெட்டதுகள்ல தவறாம கலந்துக்குவார், அரசு அரசியல் நிகழ்ச்சிகளில் பார்க்கலாம். கே.சி.வீரமணி பத்தாண்டு அமைச்சர் பயணத்தில் நிறைய விஷயங்களை செய்திருந்தாலும், தொகுதியில் மீதமுள்ள அடிப்படை தேவைகளை தேவராஜ் செய்துகொண்டிருக்கிறார்.
தொகுதி மக்களோ… கட்சிக்காரர்களோ.. எளிமையாக சண்டை போடுகிறவர்களும் உண்டு. அரசு அரசியல் நிகழ்ச்சிகளை எ.வ.வேலு பாணியில் பிரமாண்டமாய் செய்வதில் தனி கவனம் பெற்றவர்.
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி ஜோலார்பேட்டை தொகுதியில சில நிர்வாகிகள் யாருக்கும் கட்டுப்படுவதில்லை நானே ராஜா நானே மந்திரி என்கிற நினைப்பில் வலம் வருகின்றனர் எல்லோருக்கும் அடுத்த எம்எல்ஏ நான்தான், எனக்குத்தான் என்கிற ஆசை பூத்துக்குலுங்குது. இவர்கள் எல்லாருமே நல்ல பெயரை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கின்றனர் திமுகவில் கீழ்மட்ட தொண்டர்கள் இதைப்பற்றி வெளிப்படையாக பேசுகின்றனர்.
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி பணமிருக்கும் இவரிடம் பணிவு கிடையாது இவருடைய பந்தா மற்றும் கலக அரசியலில் காலம் தள்ளுகிறார் துரைமுருகன், கதிர்ஆனந்த் தீவிர ஆதரவாளர் எம்எல்ஏ சீட்டுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார். கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாகன்ரங்கம் இவரிடம் பணமில்லை பணிவு கொட்டிகிடக்கு திமுகவினர் மத்தியில் நல்ல பெயர் இருக்கு இவரும் எம்எல்ஏ சீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார். மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் வெள்ளந்தியான மனிதர் அரசியல் கடுகளவும் தெரியாது நிறைய செலவு பண்ணுவார் இருவரும் எம்எல்ஏ சீட் ஆசையில் இருக்கிறார் தனக்கு இல்லாட்டி யூனியன் சேர்மனாக இருக்கும் தன் மனைவி சத்தியாவுக்கு எதிபார்க்கிறார். அடுத்தவர் மாவட்ட சேர்மன் சூரியகுமார் திருப்பத்தூர் மாவட்டத்தில அதிக கெட்ட பெயரை சுமந்துகொண்டு நடமாடும் திமுக பிரமுகர்களில் இருவரும் ஒருவர் இவர் மனைவி சசிகலா நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி விற்பனை ஆகாமல் இருந்தால் சரி! என்று திமுகவினர் சிரிக்கின்றனர். எல்லா கான்ட்ராக்ட் வேலைகளையும் தன் பெயரில் போடச்சொல்லுகிறார். கமிஷன் ஜிஎஸ்டி எல்லாவற்றையும் சுருட்டிவிடுகிறார் சூரியகுமார் மீது பஞ்சாயத்து பெருசா போயிகிட்டு இருக்கு. அமைச்சர் எ.வ.வேலுவிடம் பலமுறை வாங்கி கட்டிக்கொண்டவர். ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் காவியா இவர் கணவர் விக்டர், இவர் மீது இல்லாத வழக்குகளே கிடையாது. இவர் செய்யாத தொழிலே கிடையாது. போலீசின் பார்வை விக்டர் மீது எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் அரசு காரில் கஞ்சா கடத்தி… விவகாரம் தமிழக அளவில் பிரபலம் ஆகிடுச்சி! அமைச்சர் எ.வ.வேலு நகராட்சி நிர்வாகத்தில் தலையிட கூடாதுன்னு சொல்லிவிட்டார். நகர செயலாளர் அன்பழகன், தேவராஜ் எம்எல்ஏ, இருவரையும் நகராட்சி நிர்வாக்தை பார்த்துக்க சொல்லிவிட்டார். விக்டரும் மனைவி பதவிகாலம் முடிஞ்சவுடன் வேற கட்சிக்கே போயிடறேன்னு சொல்லிவிட்டாராம்.
முன்னாள் மாவட்ட செயலாளர் முத்தமிழ்ச்செல்வி போன்ல அரசியல் பண்ற வித்தியாசமனன அரசியல்வாதி! கடந்த ஆறு வருஷமா ஏலகிரி கோடை விழா நடக்கல, கேட்டா நிதி இல்லையாம் வரிசையா வந்த கலெக்டர்கள் இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம்னு ஒவ்வொரு வருடமும் வாக்குறுதி கொடுத்ததோடு சரி அமைச்சர் எ.வ.வேலு ஒத்துழைப்பில், மாவட்ட செயலாளரா மட்டுமில்ல எம்எல்ஏவாகவும் திறமையா சமாளிச்ச தேவராஜ் மறுபடியும் ஜோலார்பேட்டையோ அல்லது வேறு தொகுதியோ கேட்டால் கிடைக்கும் ஏன்னா மாவட்ட செயலாளர் ஆச்சே அதுபோக, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மூவரின் கடைக்கண் பார்வை தேவராஜ் மீது இருப்பதாக உடன்பிறப்புகள் உரக்க சொல்லுகிறார்கள். ஆக, ஓட்டுபோட்ட மக்களுக்கு உபத்திரவம் கொடுக்காத எம்எல்ஏ என்று தாராளமாக சொல்லலாம்.
– இ.பட்டத்து இளவரசன்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply