பெயிலான வைகோ..பாஸாகி விட்டாரா வையாபுரி ? – மதிமுக நிஜ நிலவரம்

எந்த காரணத்துக்காக ஒருவர் போராடுகிறாரோ அவர் அதே காரணத்துக்காக அவமானப்படும் நிலைக்கு தள்ளப்படுவது உறுதி எனலாம். தமிழகத்தின்   அசைக்க முடியாத சக்தியான கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் சகட்டுமேனிக்கு வசைபாடி ,எல்லி நகையாடியவர் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இவரின் போர்க்குணமும்,  போராட்டகுணமும் 1980 வாக்கில் பேசப்பட்டது. ஏராளமான இளை ஞர்களை  கட்டிப்போட்டார்.தமிழகமே திசைமாறியது. அரசியலில் புதிய புயல் மையம்  கொண்டதாக பரவலாக பேசப்பட்டது. இனி அவ்வளவுதான் திமுக, தொலைந்தது கலைஞரின் கவர்ச்சி அரசியல் என்றெல்லாம் பிதற்றினார்கள். மனிதர் நெடிதுயர்ந்து .கருப்பு சால்வையை தூக்கி  உயர்த்தி சிம்மக்குரலில் கர்ஜனை செய்தார் கோபாலசாமி .தன அரசியல் குரு , ஆசான் , எங்கோ கிடந்த தன்னை தோளில்  தூக்கி  பார்த்தார். கருணாநிதி. எததனை தலைவர்களை தூக்கி அடித்து , திராவிட ஆட்சியை தமிழகத்தில் தொடர்ந்து நிலை நிறுத்திய பெருமை கருணாநிதியை சேரும். பெரியார், காமராஜர், ராஜாஜி என்ற பெரும் தலைமைகளை தட்டி பார்த்தவர் அண்ணா. அதற்குப்பிறகு அவரின் கடமை முடிந்தது. எனக்கு பிறகு என தம்பி  கருணாநிதி இனி சனா தனத்தை ஒழிப்பார், திராவிட ஆட்சியை தருவான் என்ற பெருமிதம் அண்ணாவுக்கு.அதை சொன்னபடி காத்தவர் கருணாநிதி. அவரால்தான் தமிழகத்தில் இன்னும் திராவிட ஆட்சி நடக்கிறது.  திமுகவின் விழுதுகளாக அதிமுக ,மதிமுக, என  தமிழக அரசியல் செல்கிறது. இப்படிப்பட்ட  நிலையில் திமுகவை வழிநடத்திய கருணாநிதிக்கு எம்ஜிஆர் தந்த தொந்தரவு கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் நடத்திய திட்டம். எம்ஜி ஆற்றுக்கு பிறகு அசுர பலமாக திமுக இருந்தது.; அப்போது கட்சியின் பிரசார பீரங்கி, புலிகனின் தம்பி என பறை சாற்றிய வைகோவை கொம்பு சீவி விட்ட எதிர்க்கட்சிகள்,  .வாய்க்கு வாய் அண்ணன் என கருணாநிதியை புகழ்ந்த வைகோவை மேல்மட்ட தலைவர்கள் விரும்பவில்லை. நாடக நடிகரை மிஞ்சி அரசியல் காயை வைகோ நகர்த்தினார். அது ஈழம் என்ற சொல்லால்  வீணாகியது.புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வைகோ திசை மாறினார். யாருக்கும் தராத மரியாதையை ,பதவியை முரசொலி மாறனுக்கு நிகராக அளித்தவர் கருணாநிதி. அதை மறந்து நன்றி கெட்ட  செயலில் ஈடுபட்டார் வைகோ. யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்று தனது புகழை தேடினார். இளைஞர்கள் பட்டாளம் அவர் பின்னல் அணிவகுத்தது. இன்னும் சொல்லப்போனால் திமுக ஆட்சி இழக்க முழு காரணம் இவர்தான். ராஜுவ் காந்தியிடம் கெஞ்சி வைகோவை காப்பற்றிய தலைவன் கருணாநிதி. அவரால் புலிகளுக்கு ஆதரவு கட்சி என திமுக  மீது முத்திரை குத்தப்பட்டது. இத்தனைநாள் கட்டிக்காத்த பெருமையை குலைத்தவர் வைகோ எனலாம்.

திமுகவின் ‘போர்வாள்’ என  அழைக்கப்பட்ட வைகோ,துரோகத்தால் வீழ்ந்தேன் என போர் முழக்கம் எழுப்பினர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவைத் தொடங்கினார். திமுகவில் பெரும் பிளவு உருவானது. காரணம், அத்தனை தலைவர்கள், இளைஞர்களின் அமோக வரவேற்பை பெற்றது மதிமுக,  பெரும் ஆலமரத்தை வீழ்த்திய மிதப்பு , அத்தனை பேரும் அணிவகுக்க ,, மதிமுக ஊர்வலம்  25 மணி நேரம் நடந்தது என கூறுவார். ஆளும் கட்சியாக மாறப்போகிறது. எம்ஜிஆரை மிஞ்சிவிட்ட்டார் என துதி பாடிய திமுக எதிர்ப்பாளர்கள், பத்திரிகை ஊடகங்கள்  புகழ்ந்தன.வாரிசு அரசியல் செய்கிறார் கருணாநிதி என போர்ப்பரணி பாடினர். திமுக எதிர்ப்பாளர்கள் பெரும் களிப்பில் மிதந்தனர்.

ஒரு உறையில்  இரண்டு கத்தி இருக்க கூடாது என அரசியல் விமர்சகர்கள் அள்ளிவிட்டு திமுகவை எள்ளி   நகையாடினர். வீழ்வேனா நான் என உடன்பிறப்புகளை தன் பேனாவால் உசுப்பேற்றிய கருணாநிதி கொஞ்சம் கூட கவலைப்பட வில்லை முக்கால்வாசி மாவட்ட செயலர்கள் வைகோ பின்  அணிவகுத்தனர்.கலங்குவாரா கலைஞர் ? உலகின் மிகப்பெரிய ராஜ தந்திரியல்லவா அவர்.  முரசொலி ஒலிக்க தொடங்கியது. வைகோவுக்கு எதிராக் முதுபெரும் பேச்சாளர் வெற்றிகொண்டான் காலம் கண்டார். வைகோ என பெயர் சூட்டி தமிழகத்தில் வைகோ செல்லும் இடங்களுக்கு பின் சென்று விளாசினார்   வெற்றி கொண்டான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள். அப்போதே தளபதி என அழைக்கப்பட்ட ஸ்டாலின் பின்னி பெடல் எடுத்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லி முத்தமிழ் வித்தகன் முழக்கமிட்டான்.

ராஜதுரோகம் இழைத்த வைகோ முதல்வர் கனவில் மிதந்தார். மதிமுக .நாளடைவில்  தேர்தல் மற்றும் அரசியலில்  சரிவு ,வீழ்ச்சி என்று தோல்விமுகத்தில் துவண்டது. திமுகவின் பரமவைரி அதிமுகவுடன் கைகோத்தார் வைகோ. ஜெயலிதாவை எந்த அளவுக்கு திட்ட முடியுமோ, கேவலப்படுத்த முடியுமோ அனைத்தும் செய்த அற்புத தலைவன் வைகோ. , அரசியல் சாக்கடை  தெரியாதவர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணம்.  மாறி மாறிக் கூட்டணி அமைத்தல், தனித்துப் போட்டி, தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மக்கள் நலக் கூட்டணி என பல நாடகங்கள்… ஓன்றும் எடுபடவில்லை. கொள்கை மீறி ,வார்த்தைகளை கடுமையாக்கி எதிர்ப்புகளை சம்பாதித்தார் வைகோ. எத்தனை நாள்கள் அவர் பின்னால் சுற்றுவார்கள் நண்பர்கள், மூத்த தலைவர்கள். தாய் கழகத்தில் பலரும் தஞ்சம் அடைந்தனர்.

எதற்கு திமுகவில் மீண்டும் இணைந்தீர்கள் என்று நெல்லையில் உள்ள மூத்த தலைவர் ஒருவரிடம்  கேட்டோம், அரசியலில் நேர்மை, புலி,என பிதற்றியவர் எந்த கொள்கைக்காக கட்சியை தொடங்கினாரோ அதை மறந்து தன மகனை பட்டது இளவரசனாக்க  முடிவெடுத்துவிட்டார். என கண்ணீருடன் கூறினார். மற்றொவரோ, இந்த ஆள  நம்பி அண்ணன் தம்பியா பழகுணவன்களை பகைச்சிட்டோம், பத்திரிகை நடத்துறேன்னு கோடி கணக்குல வசூலிச்சோம் ..பாருங்க மகனுக்கு சிகரெட் கம்பெனி டீலர் எடுத்துட்டார் மனுஷன் என்றார்..

ஒவ்வொரு தேர்தலிலும் நிலைப்பாடுகள் மாறுபட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு
செஞ்சி ராமச்சந்திரன், பொன்.முத்துராமலிங்கம், எல்.கணேசன், கண்ணப்பன், மாசிலாமணி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள்  கட்சியில் இருந்து வெளியேறினர். அண்ணனை  வசைபாடிய வாய் என் உயிர் என்று கலைஞரை புகழ்ந்தார் வைகோ.
 

உடல்நிலையும் ஒத்துழைப்பு தராமல்  கட்சியை நடத்த  முடியாத நிலை ஏற்பட்டது.  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை.பழைய மாதிரி பேச முடியவில்லை.  கட்சியைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என தவித்தார். ஒருகட்டத்தில் திமுகவில் கட்சி இணையும் என கூட வதந்திகள் பரவின. இந்த நேரத்தில்

தனது மகன் துரை.வைகோவை  முன்னிலைப்படுத்த கரோனா 2-வது அலையின்போது அவசர சிகிச்சை மையத்துக்கு மருத்துவக் குழுவை அழைத்து சென்ற துரை.வைகோ, நைசாக அரசியலில் புகுந்தார். இதை

மூத்த தலைவர்கள்  மல்லை சத்யா, ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்டவர்கள் எதிர்த்தனர். இதற்கிடையில்,  வைகோ, ‘எனது மகன் அரசியலுக்கு வருவதில் துளிகூட விருப்பமில்லை என்றார். இப்போது ஓயாத கடல் அலைபோல் தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும், திராவிட லட்சியங்களை நிறைவேற்ற முதல்வராக முக ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் புகழ் பாடுகிறார் வைகோ. இவர்களை நினைத்தால் என்னசெ ய்யலாம் என தோன்றுகிறது  நமக்கு.. இப்படி தமிழக அரசியலில் தடம் புரண்ட வைகோ பெயில் ஆகிவிட்ட்டார். மகன் வையாபுரி பாஸ் ஆவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..வையாபுரி தந்தை  போன்று  ,வெள்ளை உடையில் ஜம் என்று இருப்பர், ஒயிட் காலர் ஜாப்பு க்கு  பொருத்தமானவர் .அரசியலில் ஜொலிப்பாரா என்பதை காலம் தீர்மானிக்கும் .

– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *