நாகை மாவட்டம் கீழ்வேலூர் தாலுக்கா மற்றும் கீழ்வேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருக்கன்னங்குடியில் உள்ள பெரியமுக்கல்பட்டி என்கிற ஊர் சுற்றுப்பக்க கிராம மக்களால் கவனிக்கப்படும் ஊராகவும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் ஊராகவும் இருக்கிறது. ஒரு குடும்பம் குடிசை தொழிலாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை இறக்குமதி செய்து பாக்கெட் பண்ணி விற்கிறார்கள் என்கிற அதிர்ச்சிகரமான தகவலையும் சொல்லுகிறார்கள். மெயின் ரோட்டுல மாட்டு கொட்டகையுடன் சேர்ந்த கூரை வீட்ல இரவு பகல் என்கிற கணக்கு இல்லாமல், இருபத்தி நான்கு மணி நேரமும் தங்கு தடையில்லாமல் விற்பனையாகிறது என்பது கூடுதல் தகவல். காமராஜ் (எ) அறிவழகனை இதற்கு காரண கர்த்தாவாக ஊர் மக்கள் விரல் நீட்டி பேசுகிறார்கள். அறிவழகனின் உறவினர் ஒருவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறாராம். அவர் பெயரை சொல்லி பாதுகாப்பாக வியாபாரம் நடக்குதாம். நம்ப முடியவில்லை கொரோனா காலமென்றாலும் கடைக்கு விடுமுறை கிடையாதாம். இரவும் பகலும் குடிமகன்கள் டூவீலரில் கடையைத் தேடி பரபரப்பாக நகர்வலம் வருவதை பார்க்கலாம் என்கின்றனர். பட்டமங்கலம், ஆலியூர், கீழவேலூர் நடுவுல இருக்கிற திருக்கன்னக்குடி ஊர்களில் வயசு பசங்க கெட்டு போறாங்க என்று எதிர்ப்பு தெரிவித்தால், மிரட்டல் வருமாம் கள்ளச்சாராய வியாபார மையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருக்கிறது. ஊர்தரப்பில் இருந்து பலமுறை புகார் போயிருக்கிறது அப்பொழுது மட்டும் போலீசார் வந்து போவாங்களாம். ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி மற்றும் ஊர்காரர்கள் ஒன்றுகூடி அறிவழகனை கூப்பிட்டு உட்கார வைத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்ககூடாது என்று எழுதி வாங்கியிருக்கிறார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை பாக்கெட் சாராய விற்பனை பரபரப்பா நடக்குது லேட்டஸ்ட் தகவல். பாக்கெட் சாராயத்துடன் மெல்ல மெல்ல கஞ்சாவும் பயணம் பண்ண ஆரம்பித்துவிட்டதாம். பெரியமுக்கால்பட்டி மட்டுமல்ல சுற்றுபக்க ஊர்களும் தினமும் நிம்மதி இழந்து கொண்டிருப்பதாகக சொல்லுகிறார்கள். இதுவரை எப்படி இருந்தாலும் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். கீழ்வேலூர் காவல்நிலைய நடவடிக்கை என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
– துலாம் ராசிக்காரன்