வலுவானகூட்டணி அமைத்து
திமுகவை வீழ்த்துவோம்
– இராம. சீனிவாசன்
2026ல் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவோம் எங்களுக்கு எதிரி திமுக தான் என,
பேராசிரியர் இராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நகரத்
தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகுமாரை அறிமுகப்படுத்தும் விழா மற்றும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து வீடு தோறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநில பொதுச்
செயலாளர் இராம. சீனிவாசன்,மாநிலச் செயலாளர் எஸ்.சி.சூர்யா,மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நகரத் தலைவர் சசிகுமாரை வாழ்த்திய பின் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை பேராசிரியர் இராம. சீனிவாசன் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இராம. சீனிவாசன் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் பாஜக தொடங்கியுள்ளது திமுக இதில் கபட நாடகமாடுகிறது தேசிய கல்விக் கொள்கை என்பது 500 பக்க ஆவணம் அதை திமுகவில் யாராவது முழுதாக வாசித்துள்ளார்களா?அதில் இரண்டு அல்லது மூன்று பக்கம் மொழிக் கொள்கையை பற்றி வருகிறது தேசிய கல்விக் கொள்கை என்பதாலும் ஏற்கனவே மும்மொழி பகுதியை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திய காரணத்தினாலும் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழி இருக்கலாம் என்று மோடி சொல்லி இருக்கிறார். இது எப்படி இந்தி திணிப்பாகும்.ஸ்டாலின் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இடத்தில் பிஜேபி நபர் இருந்தால் உத்தர பிரதேச முதல்வரை சந்தித்து மூன்றாவது மொழியாக தமிழை அறிமுகப்படுத்துங்கள் என்று கூறுவோம்.மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை தாண்டி தமிழை கொண்டுவர வலியுறுத்துவோம் இதை விடுத்து விட்டு ஹிந்தியை கொண்டு வரக்கூடாது என்று கருத்து திணிப்பை வைத்து கபட நாடகம் ஆடுகிறார்.திமுக தூங்கவில்லை தூங்குவது போல் நடிக்கும் கட்சி அதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறிய குராம.சீனிவாசன் எந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு என்று பேசி இருக்கிறார்கள்.அறிவிப்பதற்கு முன்பு புலி வருது,புலி வருது கதையை போல ஸ்டாலின் பயப்படுகிறார்.இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகூட்டம் என்ற நாடகத்தை நடிப்பதால் நாங்கள் புறக்கணிக்கிறோம்
என, பேசிய ராம. சீனிவாசனிடம் 2026 ல்வலுவான கூட்டணி அமையும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி அமையுமா ? என்ற கேள்விக்குஉறுதியாக 2026 ல் வலுவான கூட்டணி அமையும் ஏனென்றால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சக்திகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மக்கள் எண்ணத்திற்கு ஏற்றார் போல் அரசியல் கட்சிகள் முடிவு செய்யும்.திமுக அரசு மேல் மக்களுக்கு கோபம் அதிர்ச்சி வந்த பிறகு கட்சிகள் மாறி முடிவெடுத்தால் மக்களுடைய கோபம் இவர்கள் பக்கம் திரும்பும். அதனால் நிச்சயமாக திமுகவிற்கு எதிரான சக்திகளை எல்லாம் ஓரணியில் திரளும் வலுவான கூட்டணி அமையும் திமுக ஆட்சிஅகற்றப்படும் என்று கூறினார். தொடர்ந்து,
எங்களுக்கு எதிரி திமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து பதில் அளித்த இராம.சீனிவாசன் அரசியலில் அடிப்படை பாடம் என்னவென்றால் எதிரியை முதலில் தீர்மானிக்க வேண்டும் எங்களுக்கு எதிரி திமுக தான் என்பதில் எங்களுக்கு எப்போதுமே கருத்து மாறுபாடு வரவில்லை.அரசியல் ரீதியாக கொள்கை ரீதியாக எங்களுக்கு எதிரி திமுக தான்.அதை அகற்றுவது தான் எங்கள் வேலை. எடப்பாடியும் எங்கள் எதிரி திமுக தான் என்று கூறியதை பாஜக சார்பில் நான் வரவேற்கிறேன்.அது நல்ல கருத்து தான் அதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார் போகப் போக பார்க்கலாம் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது தெரியாது.
ஆனால்,
திமுக எதிர்ப்பு நிலையில் எப்போதும் பாஜக பின்வாங்காது.மத்திய அரசின் மோடி,அமித்ஷா தமிழ்நாட்டுக்கு முக்கிய கவனம் செலுத்தி தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் டெல்லி தலைமையே குறியாக உள்ளது.இந்த முறை மத்திய, மாநிலத்
தலைமைகள் கட்சிகள் பிரதமர் உட்பட தமிழகத்தில் திமுக ஆட்சி வருவதை அனுமதிக்க மாட்டோம்.
, நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் நயினார் பாலாஜி ஓ பி சி அணி மாநில செயலாளர் வெங்கடேஷ் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் மாவட்டப் பார்வையாளர் ராஜரத்தினம் மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசிம்மன் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து
கொண்டனர்.
-நா.ரவிச்சந்திரன்
Leave a Reply