வாணியம்பாடி-
குப்பைகள் கொட்டுவதால்…
பாலாறு பாழடையும் கொடுமை?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்தும் ஊராட்சி வாகனங்களில் ஜாப்ராபாத் ஊராட்சியில் உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு மிக அருகமையில் கொட்டப்பட்டு வருகிறது.
அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பை கழிவுகள் பல ஆண்டுகளாக அங்கேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதை சுவாசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பாலாற்றில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் உண்ணுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுகின்ற கால்நடைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இது போன்ற கழிவுகள் கொட்டப்டுவதால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசைந்து வருகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க பாலாறு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் பலவகையில் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாலாற்றில் கொட்டுவதை தடுக்கவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– திருமலை