ஆம்பூர் தேவலாபுரம்- திருமலை திருப்பதி ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில்…

ஆம்பூர் தேவலாபுரம்-
திருமலை திருப்பதி ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில்…
வெள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் சிலை பிரதிஷ்டை விழா …

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம்  அருள்மிகு வெள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் சிலை உற்சவர்  புதிய ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் புதியதாக தங்க கவசம் சாட்டப்பட்டது
சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

இதில் அதிகாலை முதல் யாக வளர்த்து கலச பூஜை நடைபெற்றது.

முன்னதாக
மாரியம்மன் கோவில் ஆலயத்தில் இருந்து    கோவிந்தாபுரம் ரோடு தேவலாபுரம் பாலாற்றுகரை
கோவில் பின்புறம் மற்றும் ஸ்கூல் தெருவு முதல் ஊர்வலமாக 508 பால்குடங்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர்
சுவாமிகளுக்கு பஞ்சாமிர்தம் விபூதி பன்னீர் இளநீர் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.

இதன் தொடர்ந்து அபிஷேகத்துக்கு
பல்வேறு ஊர்களில் இருந்து  ராமேஸ்வரம் கங்கை காவேரி அக்னி திருப்பதி ஊட்டல் இருந்து எடுத்து வரவழைக்கப்பட்டு தீர்த்தங்கள் முருகன் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாணத்துக்கு தட்டுவரிசை கொண்டுவரப்பட்டது.

 பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் பொன் ஆபரணம் வெள்ளி ஆபரணம் பட்டு ஆடைகள் உடுத்தி தலையில் கிரீடம் சூட்டி வேல் ஏந்தி கொடுத்து சிறப்பாக செய்யப்பட்டன வெள்ளி தெய்வம் மற்றும் தெய்வானை ஆகிய  தெய்வங்களுக்கு பாட்டு ஆடை உடுத்தியும் பொன் ஆவணங்கள் வெள்ளி நகைகள்  அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு.

நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் முதல்கால யாக பூஜை நடைபெற்றது அதன் பிறகு பக்தர்களுக்கு  அனைவருக்கும்  பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்,

பின்னர் குருக்கள் மாலையை கையில் எடுத்துக்கொண்டு நடனம் ஆடி மாலை  முருகன் வெள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாணம்
சிறப்பாக நடைபெற்றன.

இரவு வானவேடிக்கை திருவீதி உலா வந்து  பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

பின்னர் மதியம் 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.

பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி சாமியை வழிபட்டனர்.  

– திருமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *