மதுரை உசிலம்பட்டி–
மணல் திருட்டு புகார்,
ஊராட்சி செயலரை கட்டையால் தாக்கிய கும்பல்…
மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி அருகே மண் திருட்டு குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய கும்பல்
படுகாயமடைந்த ஊராட்சி செயலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்
குட்பட்ட மள்ளப்புரம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் சின்னச்சாமி.
மள்ளப்புரம் பகுதியில் மண் கடத்தல்கள் அதிகமாக நடப்பது குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் ,
இது தொடர்பாக இன்று காலை அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், அஜித் என்ற இருவர் தகராறில் ஈடுபட்ட நிலையில் இது குறித்து எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார்களை வாபஸ் பெற கோரி இன்று சேடபட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் மள்ளப்புரத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த சின்னச்சாமியை இடைமறித்த ராஜேஷ்குமார், அஜித் என்ற இருவரும் அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து,
அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று அருகில் உள்ள மலை அடிவாரத்தில் வைத்து கத்தியாளும், கட்டையாலும் தாக்கியுள்ளனர்.
அவர்களில் காலில் விழுந்து தப்பிய சின்னசாமி மள்ளப்புரத்திற்கு வந்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மண் கடத்தல் குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலர் தாக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– நா.ரவிச்சந்திரன்