முன்னணி நட்சத்திர நடிகைகளின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்பொழுதும் அலாதியான ஆர்வம் உண்டு. நடிகைகள் நடிகர்களை காதலித்தால் … தொழிலதிபர்களை காதலித்தால்… ஆண் தோழர்களுடன் டேட்டிங்கில் ஈடுபட்டால்… பிரேக் அப் ஆகிவிட்டால்… திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டால்… மீ டூ சர்ச்சையை கிளப்பினால்… சமூக வலைதள பக்கத்தில் ஏதேனும் ஒரு கருத்தை பகிர்ந்தால்… உடனடியாக ரசிகர்களின் எதிர்வினை மீம்ஸாக இருக்கும்.
அதிலும் திரிஷா போன்ற நட்சத்திர நடிகைகள் எது செய்தாலும் அது செய்தியாகி விடும். திரிஷாவின் முதல் காதல் சினிமா என்றாலும்.. அதிகாரப்பூர்வமாக அவர் கடந்த காலங்களில் தொழிலதிபர் வருண் மணியனுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டு , அந்த கிசுகிசு உண்மையாகி , இருவரும் திருமண நிச்சயம் வரை சென்றார்கள். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள்.
சில காலம் அமைதியாக இருந்த திரிஷாவை திருமணம் செய்து கொள் என அவருடைய அம்மா வற்புறுத்த தொடங்கினார். இதற்குப் பயந்து தோழிகளுடன் ஆஸ்திரேலியா – மாலத்தீவு – நியூசிலாந்து- என வெளிநாட்டிற்கு பறக்கத்தொடங்கினார். பிறகு அவர்கள் அம்மா அமைதியாகிவிட்டார்.
திரிஷாவிற்கு தற்போது 41 வயதாகிறது. அவர் சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக இயங்கி வருபவரும் கூட. அவருக்கு மில்லியன் கணக்கிலான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். இருந்தாலும் கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு சென்று கல்லா கட்டுவதை தவிர்த்தார். வருடத்திற்கு ஒரு படம் என நடிக்க தொடங்கினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘கோட் ‘ திரைப்படம் மட்டும்தான் வெளியானது.
‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ என சில படங்களில் மட்டுமே இயக்குநரையும் , நடிகரையும் தேர்வு செய்து நடித்து வந்தார். அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து விரைவில் வெளியாக இருக்கும் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்திலும், ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசனின் ‘தக் லைப் ‘படத்திலும் நடித்து வருகிறார். இத்துடன் இல்லாமல் ‘சூர்யா 45 ‘எனும் படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.
இப்படி திரையுலகில் பிசியாக இருந்தாலும் நேற்று அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மணப்பெண் அலங்காரத்துடன்… வெட்கத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்திருக்கிறார். அத்துடன் ‘லவ் ஆல்வேஸ் வின் ‘ என்று பகிர்ந்திருப்பதால் மீண்டும் த்ரிஷா யாரையோ காதலிக்க தொடங்கி இருக்கிறார் என உறுதியாக தெரிய வருகிறது.
அவர் தொழிலதிபரா? நடிகரா? விளையாட்டு துறை வீரரா? என்பது விரைவில் தெரியவரும் என்கிறார்கள் இணையவாசிகள்.
40 வயது முதிர்கன்னிக்கும் காதல் வந்தால் ரசிகர்கள் கொண்டாடுவது நடிகைகளுக்கு மட்டுமே..! வாழ்க ரசிகர்கள்! வாழ்க த்ரிஷா!
-கே.வி.ஆர்.கோபி
