மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ, ஏ.கே.செல்வராஜ் கட்சியில் சீனியர் மாநில அமைப்பு செயலாளராகவும் இருக்கிறார் மாஜி மந்திரி எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் சீட்டு வாங்கி கொடுத்து செலவுக்கு பணமும் கொடுத்த புண்ணியவான், தான் சார்ந்த ஒக்கலிக்க மகாஜன சங்கத்தின் மூலம் பேசி ஒ.கே.சின்ராஜை காம்பரைமைஸ் பண்ணி தேர்தல் களம் கண்டு எம்எல்ஏ ஆனவர். பணத்தை கொஞ்சம் தாராளமாய் காட்டியதால் ஏ.கே.செல்வராஜிக்கு வெற்றி சாத்தியமாயிற்று என்கின்றனர். காலை நேரத்தில பார்க்கனும்னு ஆசைப்பட்டா சுருளிபாளையத்தில உள்ள அவங்க அக்கா வீட்ல பார்க்கலாம் அப்புறம்னா, தொகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் பார்க்கலாம். கட்சியில் மூத்த நிர்வாகி என்பதால், கோஷ்டி அரசியல் இல்லை செல்வராஜோடு ஒத்துப்போகிறார்கள் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், கட்சிக்காரங்களுக்கு மட்டும் மரியாதை இருக்கும் தொகுதி மக்களை பற்றி கண்டுக்கறதில்லை. திமுக ஆட்சி நடக்கிறது என்றாலும், அதிகாரிகள் அனைத்து தரப்பிலும் அதிமுக எம்எல்ஏவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் அதாவது அதிகாரிகள் மத்தியில் அதிமுகவினரின் கை ஓங்கி இருக்கிறது என்பது உண்மை. அரசு நிகழ்ச்சிகள் அதிமுகவின் அரசியல் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பார். கட்சியினர் தவிர்த்து மற்றவர்களிடத்தில் சீறுவார் ஏ.கே.செல்வராஜ். சாதனை என்று குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவும் செய்யல நூறு நாளா எம்எல்ஏவா இருக்கார்னு வேண்டுமானால் சொல்லலாம்.
மேட்டுப்பாளையம் தொகுதி ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை
