Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கடந்த ஒரு வாரத்தில் இரு முறை 10க்கும் மேற்பட்ட  மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும் அளவு தமிழ்நாட்டில் இந்த பருவத்தில் கன மழை பெய்துள்ளது. மழையே சுகம், வளம், வரம். ஆனால், இயற்கையின் அந்த வரம், மனிதனின் செய்கையால் சாபமாக மாறும் அபாயம் உள்ளது. அதிலும், தமிழ்நாட்டின் சென்னை பட்டினம் இந்த சோகத்துக்கு இலக்காகியுள்ளது.   இங்கு 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் சமீபத்தில் பெய்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்துள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், புழல்  என சென்னையை சுற்றியுள்ள  நீர்த்தேக்கங்களை திறந்துவிடுமளவு மழை நீர் பெருகியுள்ளது. அடையாறு, கூவம், கொசஸ்தலை எல்லாம் பெருகி ஓடுகிறது. நவம்பர் 8 முதல் 12ஆம் தேதி வரை நல்ல மழை இருக்கும்.அனைத்து மாவட்டங்களிலும் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். அரபிக் கடல், வங்கக் கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 19ஆம் தேதி வரை மழையை கொடுக்கும். 20ஆம் தேதி தான் வானிலையில் மாற்றம் ஏற்படும்.  வெப்பநிலை அதிகரித்து வெயில் தென்படத் தொடங்கும். ஆனால், டிசம்பர் மாதத்திலும் கனமழை முதல் மீண்டும் மிக கனமழை வரை பெய்யக்கூடும். என வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆருடன் கூறத்தொடங்கியதால் மக்கள் கலவரமடைந்தனர். சென்னைக்கு எவரும் வரவேண்டாம் என்ற அறிவிப்பு வேறு அவர்களை கலவரப்படுத்திவிட்டது. அன்றாடங்காய்ச்சிகள் அகதிகளாகிவிட்டனர். இதுவே தொடர்ந்தால், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். போக்குவரத்து தடைப்படும். நோய், பசி யாவும் வர வாய்ப்புள்ளது. ஆற்றங்கரைகளில், குடியிருப்புகளாக்கப்பட்ட குளம், ஏரிக் கரைகளில் இருப்பவர்கள் விழித்தே இருக்க வேண்டும். உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சுகமான மழை, சோகமான பெருந்துயரமாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம், ஆக்கிரமிப்பு, நகரமைப்பு. சென்னையில் ஒரு காலத்தில் நிறைய ஏரி, குளங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் அழித்துவிட்டு, திட்டமிடாத குடியிருப்புகளை உருவாக்கியதால், நீர் வரத்து, நீர்ப்போக்கு கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. இதனால் வீடுகளை நீர் முற்றுகையிடத் தொடங்கிவிட்டது. இந்நிலை மாற வெறும் விழிப்புணர்வும் ,தற்காலிகமாக அரசு செய்யும் ஏற்பாடும் போதாது. நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம், வரத்து, போக்கு கால்வாய்கள் சீரமைப்பு, நீர்நிலை அல்லாத தரிசு பூமியில் புதுக்குடியேற்றம் என அரசு திட்டமிடாவிட்டால் இது ஆண்டுதோறும்  நிகழும் ஆபத்தாகிவிடும். ...

ஒரு நடிகரின் மகன் போதை வழக்கில் கைதானது மகாராஷ்டிர அரசியல் வானில் பலத்த சூறாவளியை எழுப்பியுள்ளது.  கடந்த அக்டோபர். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு ...

கர்நாடக பாஜகவில் முதல்வருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மாறாக, கர்நாடக பாஜக தலைவர் ஒருவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அங்கு, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று பாஜகவின் ...

கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒன்றில் மட்டும் பாஜக வென்றுள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு  சொந்தமான விஜயபுரா மாவட்டத்தில் தான் தேர்தல் நடந்தது.   பாஜக வசமிருந்த தொகுதி காங்கிரசால் கைப்பற்றப்பட்டுள்ளது.   ...

ஒவ்வொரு வருடமும் மாநில அரசுகளின் ஆட்சி நிர்வாகம் மற்றும் நலத்திட்டங்களை கருத்தில்கொண்டு   PAI தர குறியீடு பொது விவகாரக் குறியீடு,  அதாவது, Public Affairs Index வெளியிடப்படுகிறது. பெங்களூரை ...

ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்குவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் ...

பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகளை நடத்த கட்டுப்பாடு உள்ளது. சில மாவட்டங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை ...

வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். பனிக் காலம் மாசு  உச்சம் தொடும். எனவே, கடந்த முறையை போல ...

கன்னடத் திரையுலகின் பிரபல நடிகரும் வீரப்பனால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவருமான ராஜ்குமாருக்கு சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என்ற மூன்று மகன்களில், சிவராஜ்குமாரும் புனித் ...

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, சென்ற வாரம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியாவும் ஜி 20 ...