ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை, பணியின் போது மது அருந்தும் ஊழியர்…

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேரறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இந்த நிலையில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வரும் இளையராஜா, என்பவர்
பணியின் போது மது அருந்தி உள்ளார். இதனை சிகிச்சை பெற வந்த நோயாளியின் உறவினர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் வைரலாகி வருகிறது

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை  டீன் ஜெயபாரதி, நாம் தொலைபேசியில் அழைத்த போது அவர்  மருத்துவ உதவியாளர் இளையராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  • பா.மணிகண்டன்