அரசியலுக்கு புதுசு முதல் முறையா எம்எல்ஏ! அனுபவம் ஏதுமில்லை ஆனால், அதிமுகவில் உள்ள சீனியர்களையும், திமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான தேவராஜை அலறவிட்டுக் கொண்டு இருக்கிறார் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் யூனியன் சேர்மனாக இருந்த பெத்தவேப்பம்பட்டு கோபால் மகன்தான் செந்தில்குமார், கடந்த முறை நேர்காணலுக்கு போகும்போது மாவட்ட செயலாளரும் மந்திரியுமான கே.சி.வீரமணியிடம் வாணியம்பாடி தொகுதிக்கு சீட்டு கேட்டு சில கோடிகளை கொடுத்திருந்தார். இந்த முறை தன் மகனுக்காக சீட் கேட்டார். இன்னும் சில கோடிகளை சேர்த்து கவனிக்க அதிமுகவில் செந்தில்குமாருக்கு சீட் ஓ.கே. ஆகிவிட்டது. திமுகவில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்தவர்கள் அமைதியாகிவிட்டனர். அதிமுக தலைமை கொடுத்த பணத்தில், கொஞ்சம் ஒதுக்கிவிட்டு மீதியை செலவு செய்து கரை ஏறினார் செந்தில்குமார். நன்றி சொல்ல கிளம்பினார் கொரோனா பரவல் அதிகமாகிவிட அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். தொகுதிக்குள் அதிமுக நிர்வாகிகள் செந்தில்குமாருக்கு ஆதரவா இருப்பதுபோல நடிக்கிறார்கள். ஆனால் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் விரும்புகின்றனர். செந்தில்குமார் வன்னியர் என்பதால், திமுகவில் உள்ள வன்னியர்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டனர் எனபது தனிக்கதை! வீட்டிலும் எம்எல்ஏ அலுவலகத்திலும் பாரக்கலாம். திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் வாணியம்பாடியை சேர்ந்தவர், அரசியல் ரீதியாக அவரோடு உரசும் செந்தில்குமார், தனிப்பட்ட முறையில் மோதல் மேற்கொள்வதில்லை. குறிப்பாக ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொடுக்கும்போது நான் இந்த தொகுதி எம்எல்ஏ, நான்தான் கொடுப்பேன் என்று சொல்லிலும் செயலிலும் வேகம் காட்ட, அதனால் ஏற்பட்ட உரசல் தமிழக அளவில் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைத்திருந்த பள்ளிக்குள் தேவராஜ் நுழைந்தார் என்று அதிமுக தொண்டர்கள் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி மீண்டும் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கினார். செலவு செய்வதால், அதிமுகவினர் மத்தியில் நல்ல பெயர் எளிமையாக நடந்து கொள்வதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆனாலும், எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்துகொண்டு தொகுதிக்கு என்ன செய்துவிட முடியும்? என்கிற அச்சமும் செந்தில்குமாருக்கு இல்லாமல் இல்லை. தொகுதிக்குள் அடிக்கடி பார்க்கலாம் திமுக மாவட்ட செயலாளரோடு அரசியல் ரீதியாக மோதி தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார் ஆனால் தேவராஜ் தரப்போ, மாவட்ட செயலாளர் பதவி மந்திரி பதவிக்கு சமம் என்று சொல்வதோடு, அரசு நிகழ்ச்சிகளில் செந்தில்குமாரை தவிர்த்துவிட்டு நிகழ்ச்சி நடத்தி பதிலடி கொடுக்கிறார். நாயக்கனேரி, உதயேந்திரம் வள்ளிப்பட்டு உள்ளிட்ட ஊர்களின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரியதால் சமீபத்திய மழையில் ஏரிகள் நிரம்பிவிட்டது. தேவராஜோடு எதிர்கட்சி அரசியல் பண்ணி வளரலாம் ஆனால் வாணியம்பாடி தொகுதிக்கு என்ன பலன்? என்பதை உணர்ந்தே இருக்கிறார். நூறுநாள் சாதனை என்றால் இரண்டுமுறை தன்னை தமிழகமே திரும்பி பார்க்க வைத்தார் அவ்வளவுதான்.
வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை
