சோளிங்கர் தொகுதி முனிரத்தினம் எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியின் பிரதான அடையாளங்களில் ஒன்று பாரதி பஸ்! இராணிப்பேட்டை மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் முனிரத்தினம் பிரதர்ஸ். திமுகவில் சேர்ந்து, எம்எல்ஏ மாவட்ட செயலாளர் ஆகப் போகிறார் என்று தேர்தலுக்கு முன்பு புரளி கிளம்பியது ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பாக திமுக கூட்டணியில் வேட்பாளராகி வென்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதியின் அடையாளமாகி இருக்கிறார். ஒரு காலத்தில் முனிரத்தினம் பிரதர்ஸ் காரில் போவதை பார்த்துவிட்டால், உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து நின்று கும்பிடுவார்கள் கடவுளை பார்க்குற மாதிரி பய பக்தியா பார்த்தாங்க வீட்டிற்கு போனாலும், இவங்க தரிசனம் எளிதாய் கிடைக்காது ஏழு கேட்டை தாண்டி போகனும். அதிசயம், ஆச்சர்யம் பாருங்கள் இந்த சூழ்நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. இதுதான் லேட்டஸ்ட் நிலவரம்! ஏராளமான பஸ்களுக்கு உரிமையாளர்கள் முனிரத்தினம் பிரதர்ஸ், ஏராளமான தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பிழைக்கின்றனர் டி.வி.எஸ் கம்பெனி, பஞ்சுமில் என ஏராளமான குடும்பங்கள் பிழைக்க வாழ்வாதாரத்தை உருவாக்கியவர்கள் அப்படிப்பட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து முனிரத்தினம் எம்எல்ஏ ஆகி இருக்கிறார். தங்களிடமிருக்கும் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவே அரசியலுக்கு வந்த குடும்பம் சம்பாதிப்பதற்காக வரவில்லை. லஞ்சம் வாங்கியதில்லை, வாங்குவதுமில்லை. நாட்டாமை மாதிரி பண்ணையார் அரசியலில் விரும்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முனிரத்தினம் ஊரில் இருந்தால் தொகுதிக்காரர்கள் எப்பொழுதும் வரலாம் பார்க்கலாம். அதிகாரிகளிடம் தன்மையாக பேசுவார் நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டால் வருவார். திமுக ஆட்சி என்பதால், அதிகாரிகளை விரட்டுவது, மிரட்டுவது, கமிஷன் வாங்குவது என வருவாய் வேலைகளை உடன்பிறப்புகள் சிறப்பாக செய்கின்றனர். அதில குறிப்பா மாவட்ட அவைத் தலைவர் அசோகனை விரல்நீட்டி பேசுகின்றனர். கூச்சப்படாம எம்எல்ஏ வாங்குறதில்ல அதனால, அவர் பங்கையும் எங்கிட்டேயே கொடுத்திடுங்க என்று அதட்டல் போடுகின்றனர். அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு சரி வேறு எதையும் கண்டுகொள்ளாத முனிரத்தினம் தொகுதி மக்களுக்கு நல்லது நடந்தா சரி என்று அமைதியாகி விடுகிறார். ஆக, திமுக டாமினேஷன் அதிகம் இந்த பகுதியில், காங்கிரஸ் கட்சிக்கு அடையாளமாய் இருந்த பாரதி குடும்பத்தை காங்கிரஸ் கட்சி கைவிட்ட வரலாறும் உண்டு அதனால, காங்கிரஸ் காணாமல் போன வரலாறும் உண்டு. இப்ப மறுபடியும் கைகோர்த்து முதல்ல இருந்து ஆரம்பிச்சி இருக்காங்க. எம்எல்ஏ ஆகி நூறு நாளில் முனிரத்தினம் சோளிங்கர் தொகுதியில என்ன சாதிச்சி இருக்கார் என்று தொகுதிவாசிகளிடம் கேட்டோம், அப்படி எதுவும் இல்லீங்க, அவரை பார்க்க முடியுது பேசமுடியுது இதுவே சாதனைதான் என்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நினைவில் வைத்து செய்யனும் முனிரத்தினம் கோரிக்கை வைக்கணும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *