சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களை பாமக பெற்று அதில் ஒன்று சேலம் மேற்கு தொகுதியும் மற்றொன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதி,ஆகிய இரண்டு தொகுதிகளையும் பாமக கைப்பற்றியது. சேலம் மாவட்டத்தின் முக்கியமான தொகுதி என கருதப்படும் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அருள் வெற்றி பெற்றார் .
அருள் எம்எல்ஏ தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தொகுதி முழுவதும் பல்வேறு அரசு திட்டங்களையும் கொண்டுவந்தார்.இவர் அரசுக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டார். திமுக அமைச்சர் அவர்களுடன் மிக நெருக்கமாக தனக்குவேண்டிய காரியங்களை செய்து கொண்டுடார். அதே சமயத்தில் தன்னை வெற்றி பெற செய்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தீவிர விசுவாசியாகவும் செயல்பட்டு வந்தார் .
நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர அருள் எம்எல்ஏ அவர்களுக்கு அதிமுக தரப்பில் இருந்து அழுத்தும் தரப்பட்டது. எப்படியாவது பாமகவை அதிமுக கூட்டணிகள் சேர வைத்திட வேண்டும் என்று அருள் எம்எல்ஏ தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதனை பாமக தலைமை ரசிக்கவில்லை.
இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தலைமைக்கு பாமக நிர்வாகிகள் சார்பில் அனுப்பப்பட்டது. இதில் ,திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினிடம் “செல்லப் பிள்ளையாக செயல்பட்டு வருகிறார்” இவர் கட்சியை வளர்ப்பதற்கு பதிலாக தன்னை வளர்த்துக் கொள்கிறார்.
சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாருக்கு அடுத்ததாக தன்னை ஒரு சக்தி மிகுந்த நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் . இவர் தொண்டர்களின் மதிப்பதில்லை என்றும் பாமக தரப்பில் பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. அதன் பிறகு இவரை பாமகவில் ஓரம் கட்டப்பட்டார் . இவருக்கு எதிராக மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சதாசிவத்தை வளர்த்து விட்டது தலைமை. இவ்வாறு உட்கட்சி பிரச்சனை தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை பேசி, பாமக வட்டாரத்திலும், பெண்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது என்று இங்கு பார்ப்போம்.
ஆம்பளயே இல்லையா?” பெண்களிடம் ஆத்திரமாக பேசிய பாமக எம்.எல்.ஏ அருள்
பாமக எம்எல்ஏ அருள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக தங்களுக்குத்தான் சொந்தம் என தமிழ் பேசும் விஸ்வகர்மா சமூகத்தவரும், தெலுங்கு பேசும் விஸ்வகர்மா சமூகத்தவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்,இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓமலூர் தாசில்தார் இரு தரப்பையும் அழைத்து, பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை டிசம்பர் 18ம் தேதி நடைபெற்றுள்ளது. இதில், இரு தரப்பின் அழைப்பை ஏற்று, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார். இதில், ஒரு தரப்பில் ஆண்களும், மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே வருகை புரிந்தார்.
அப்போது பேசிய எம்எல்ஏ அருள், இரு தரப்பும் சமாதானமாகி கோயில் திறக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில், ஒரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசியுள்ளனர். இந்த நிலையில், எம்எல்ஏ அருள் குறுக்கிட்டு, “ஆவேசமடைந்த பெண்களைப் பார்த்து உங்கள் வீட்டில் ஆம்பளைங்க இல்லையா, எல்லாம் பொட்டையா என பேசினார். இதனை சற்றும் எதிர்பாராத பெண்கள் கையெடுத்து கும்பிட்டு இவ்வாறு பேசாதீங்க ஐயா என்று கதறி அழுந்தனர். எம்எல்ஏ அருள் அதனை சமாளித்து உங்கள் தரப்பு முக்கியஸ்தர்கள், ஆண்கள் இல்லாமல் எப்படி உறுதியான முடிவை எடுப்பது. உங்கள் தரப்பு ஆண்களை வரச்சொல்லுங்கள்,” என்று பேசியது வெளியான வீடியோவில் பதிவாகியுள்ளது.
அவரது பேச்சுக்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டுள்ளனர். எங்களை பார்த்து எப்படி ஆம்பளைங்களே இல்லையா? என்று கேட்கலாம் என்று கூறியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள், “இந்த கோயில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது. அதனால், கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து அனைத்து சமுதாய மக்களும் வந்து வணங்கி செல்ல அனுமதிக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் கோயிலை இரு தரப்பும் இழக்க நேரிடும். ஒற்றுமையுடன் இருந்து கோயிலை திறந்து பூஜை செய்ய இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்காமல் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
மேலும், இது குறித்த வீடியோவில், எம்எல்ஏ அருளை பார்த்து, பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டு அழும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாமக எம்எல்ஏ அருளின் இத்தைகைய செயல்பாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாமக எம்எல்ஏ இச்சம்பவம் குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து பாமக எம்எல்ஏ அருள் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், “கூட்டத்தில் பெண்கள் கோயிலை திறக்க வேண்டும் என அழுதபடி எனது காலை பிடித்து கேட்டனர். இது எனக்கு வேதனையையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. கோயிலை திறக்க வேண்டும் என்பது எனது ஆசையும். ஆனால், அரசு கோயிலை பூட்டியுள்ளது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கோயிலை திறக்க முடியும்.
நான் எம்எல்ஏ என்ற அடிப்படையில் சட்டத்தை கையில் எடுத்து கோயிலை திறக்கமுடியாது எனப் பேசினேன். அவர்கள் என்னைப் பேசவே விடாமல் கோயிலை திறக்கச் சொல்லி கேட்டனர். பொதுவான இடத்தில் உள்ள கோயிலில் நாங்களும் வழிபட உரிமை வேண்டும் என மற்றொரு பிரிவினர் கூறினர். அதன் பிறகு தான் பெண்களிடம், உங்கள் தரப்பில் ஆண்களை வரச் சொல்லுங்கள் என்று கூறினேன்,” என்று தெரிவித்துள்ளார்.
– இரா.சீனிவாசன்
Leave a Reply